* நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது.
* உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள். இல்லையெனில், இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.
* அனைவரிடமும் மகத்துவம் இருக்கிறது.
* தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்ய விரும்பினால் மட்டுமே உங்களுக்கு அதிகாரம் தேவை. இல்லையெனில், எல்லாவற்றையும் செய்ய அன்பு மட்டுமேப் போதுமானது.
* நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது.
* ஒரு மனிதனின் உண்மையான குணம் அவன் குடித்ததும் வெளியே வரும்.
* என் உதடுகளுக்கு என் பிரச்சனை தெரியாது, அவைகள் எப்போதும் புன்னகைக்கின்றன.
* இது ஒரு இரக்கமற்ற உலகம், அதைச் சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும்.
* ஒரு நகைச்சுவையை உருவாக்க, எனக்கு வேண்டியவை ஒரு பூங்கா, ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு அழகான பெண்.
* நாம் அனைவரும் நம்மை நாமே இழிவாக நினைக்கின்றோம். அதுதான் இந்த உலகின் பிரச்சனை.
* ஒரு சிறந்த நடிகரின் இன்றியமையாத அடிப்படை தகுதி, அவர் தன்னுடைய நடிப்பைத் தானே நேசிப்பதாகும்.
* நான் ஒரு பேரரசராக இருக்க விரும்பவில்லை. அது எனது தொழில் இல்லை. நான் யாரையும் ஆளவோ அல்லது வெற்றி கொள்ளவோ விரும்பவில்லை.
* உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
* நீங்கள் கீழேயேப் பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமாட்டீர்கள்.
* இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை.
* புத்திசாலித்தனத்தை விட, எங்களுக்கு அன்பும் கருணையுமே தேவை.
* என் வலி ஒருவரின் சிரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், என் சிரிப்பு ஒருபோதும் ஒருவரின் வலிக்குக் காரணமாக இருக்கக்கூடாது.
* நாம் மிக அதிகமாகச் சிந்திக்கிறோம், மிகக் குறைவாகவே உணர்கிறோம்.
* நீங்கள் சிரிக்காத ஒரு நாள், நீங்கள் வீணாக்கிய நாள்.
* கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
* வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட, கலைப்படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன.
* உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம்.
* எளிமை என்பது எளிதான விடயம் அல்ல.
* தனக்குச் சமமானவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள், தன்னை விடத் தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுங்கள்.