* அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
* அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
* அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
* அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
* அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
* அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
* ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
* ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
* ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
* ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
* இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
* இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
* இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
* இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
* இறுகினால் களி. இளகினால் கூழ்.
* உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.
* உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
* உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.
* ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
* எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.
* எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
* கறந்த பால் காம்பில் ஏறாது.
* கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
* கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
* கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
* காற்றில்லாமல் தூசி பறக்காது.
* காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
* கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
* செத்தப் பிணத்திற்கு அருகே, இனி சாகும் பிணம் அழுகிறது.
* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
* தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
* தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
* நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
* தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
* தெய்வம் காட்டுமே தவிர, ஊட்டாது.
* பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
* பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
* பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
* பைய (மெதுவாக) மென்றால் பனையையும் மெல்லலாம்.
* விசாரம் முற்றினால் வியாதி.
* வாங்குகிற கை அலுக்காது.