* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான், அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
* கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டறிவீர்; தட்டுங்கள் திறக்கப்படும்.
* எவனொருவன் தன்னைத் தானே தாழ்த்திக்கொள்கிறானோ, அவன் பிறரால் உயர்த்தப்படுவான்.
* நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, "கடலில் பெயர்ந்து விழு'' என்றாலும் அப்படியே நடக்கும்.
* கோபமும் பொறாமையும் மனிதனை கொன்று விடும் சக்தி படைத்தவை.
* ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உன் மறு கன்னத்தை காட்டு.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதேச் செய்.
* அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்தி விட வல்லது.
* கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
* செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் காரணம்.
* அன்பாக வார்த்தை நிறைய பலன் கொடுக்கும். கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
* நல்ல மரங்கள் நல்ல கனிகளைக் கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையேச் செய்வர்.
* ஒருவரும் துரத்தாவிடினும் தீயவர் பயந்து ஓடுவர். நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர்.
* அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
* உங்கள் விரோதிகளை நேசியுங்கள். உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* கவலைப்படுவதன் மூலம் உங்களில் எவரும் ஒரு முழம் கூட உயர்ந்துவிட முடியாது.
* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
* அறிவில்லாத மனிதன் கவுரவம் உள்ளவனாய் இருந்தாலும், அழிந்து போகும் மிருகங்களுக்குச் சமமானவனாயிருக்கிறான்.
* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வர்.
* மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.
* புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான். ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.
* மெய்யான வாழ்விற்கு வாசல் மிகவும் குறுகியது. மெய்யான வாழ்விற்குக் கொண்டு செல்லும் பாதையோ கடினமானது. மிகச் சிலரே அப்பாதையைக் கண்டறிகிறார்கள்.
* உங்களை நேசிக்கிறவர்களை மட்டும் நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது.
* மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன் மதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி; தீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.