* என்றும் படித்துக் கொண்டே இரு. (மநு ஸ்ம்ருதி 6-8)
* எது விடுதலை அளிக்குமோ, அதுவே கல்வி. (விஷ்ணு புராணம் 1-19-41)
* செல்வம் போலவே கல்வியும் அகந்தை காரணமாக அழிந்துவிடும். (பாரத மஞ்சரி 3-21-941)
* வேதக் கல்விக்கு எதிரான எல்லாக் கல்வியையும் விட்டுவிடு. (மநு ஸ்ம்ருதி 4-17)
* நல்ல கல்வி அறிவு பெற்றுவிட்டால், பணத்தைப் பற்றிய கவலை எதற்கு? (சாணக்கிய நீதி 3-40)
* அறிவு, பணம், மலையேறுதல் ஆகிய மூன்றும் படிப்படியாகவே அடைய முடியும். (நாரதீய சிக்சா)
* மோகம் என்னும் இருண்ட குகையில் கல்வி எனும் விளக்கு இருளகற்றும். (ப்ருஹத் கதா மஞ்சரி)
* கல்வியறிவற்றவன் மிருகம். (நீதி சதகம் 16)
* அவலட்சணமானோர்க்கும் கல்வியே அழகு சேர்க்கும் (சாணக்கிய நீதி 3-29)
* கல்வியினால் உயர்ந்த ஞானம் கிட்டும். (பஞ்ச தந்திரம் 5-36)
* பயணத்தில் நண்பன் கல்வி. (சாணக்கிய நீதி 8-9)
* கல்வியேக் கடவுள். (நீதி சதகம் 16)
* கல்வியே செல்வத்துள் செல்வம். (ப்ரஸங்காபரணா 8)
* கல்வி கரை காணாத கடல். (கஹாவத் ரத்னாகர்)
* கல்வி பணிவைத் தரும். (கீதோபதேசம்1-6)
* அறிவு வேட்கையுடையவனுக்கு உறக்கமும் இல்லை, இன்ப நாட்டமும் இல்லை. (சுபாஷித ரத்ன பாண்டாகரம் 3-845)
* ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர் கல்வி. (நீதி சதகம் 16)
* கல்வி என்பது மறைந்திருக்கும் செல்வம். (சாணக்கிய நீதி 4-6)
* சமமான அறிவுடையோர் மற்றவரின் புகழைக் கண்டு பொருமுவது இயல்பே. (மாளவிகாக்னிமித்ரம் 1-20)
* கல்வி என்பது வரையாது வழங்கும் காமதேனு. திருப்தி என்பது தேவலோகத் தோட்டம். (சாணக்கிய நீதி 2-13)
* கல்வியால் எதையும் அடைய முடியும். (ப்ருஹத் கதா மஞ்சரி)
* கல்வி மூலம் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்கும். (ஈஸாவாஸ்யோபநிஷத்)
* கல்வி புகழைத் தரும். (தூர்த்தநர்த்தகா)