வாடிக்கையாளருக்கு முதலிடம்

வாடிக்கையாளரின் கருத்து உங்கள் உண்மை.
- கேட் ஜாப்ரிஸ்கி

வாடிக்கையாளருக்கு நீங்கள் சிறப்பாகச் சேவை செய்யும் போது, அவர்கள் எப்போதும் உங்கள் முதலீட்டைத் திருப்பித் தருவார்கள்.
- காரா பார்லின்

ஒரு வாடிக்கையாளரைக் கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகும்... ஒருவரை இழக்க சில நொடிகள் போதும்.
- வின்ஸ் லோம்பார்டி

வாடிக்கையாளரைச் சுற்றி உங்கள் உலகத்தைச் சுழற்றுங்கள். மேலும், அதிகமான வாடிக்கையாளர்கள் உங்களைச் சுற்றி வருவார்கள்.
- ஹீதர் வில்லியம்ஸ்

வாடிக்கையாளர் சேவையின் சிறந்த வடிவம் சுய சேவையாகும். வாடிக்கையாளர்களுக்குத் தங்களுடைய பதில்களைத் தாங்களேப் பெறுவதற்குத் தொடர்ந்து அதிகாரமளிக்கவும்.
– டான் பெனா

எந்தவொரு நிறுவனத்திலும் சிறந்த வாடிக்கையாளர் சேவையே முதன்மையான வேலை. இது நிறுவனத்தின் ஆளுமை மற்றும் வாடிக்கையாளர்கள் திரும்பி வருவதற்குக் காரணம். வாடிக்கையாளர்கள் இல்லாமல் எந்த நிறுவனமும் இல்லை.
- கோனி எட்லர்

வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது, அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதைக் கணிக்க உங்களை அனுமதிக்கிறது.
- கொலின் ஷா

வாடிக்கையாளரைக் கவனித்துக் கொள்ளுங்கள், வணிகம் தன்னைத்தானேக் கவனித்துக் கொள்ளும்.
- ரே க்ரோக்

வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் பேசுவதற்கு நிறைய நேரம் செலவிடுங்கள். எத்தனை நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்கவில்லை என்பதை நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
- ராஸ் பெரோட்

ஒரு வாடிக்கையாளரை வெல்வதற்கு எவ்வளவு திறமை தேவையோ, அதே அளவுக்கு ஒரு வாடிக்கையாளரைத் தக்க வைத்திருக்க வேண்டும்.
- அமெரிக்கப் பழமொழி

ஒரு வாடிக்கையாளரை நன்கு கவனித்துக்கொள்வது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளம்பரத்தை விட, அதிக மதிப்புமிக்கதாக இருக்கும்.
- ஜிம் ரோன்

நீண்ட காலத்தில், வாடிக்கையாளர்கள் உங்களை நேசித்தால் மட்டுமே நீங்கள் பொருத்தமானவர்.
- டிம் குக்

வாடிக்கையாளர் சேவை என்பது புதிய சந்தைப்படுத்தல், இது ஒரு வணிகத்தை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகிறது.
- ஜே பேர்

உங்கள் வாடிக்கையாளர்களின் வலியைக் குறைக்கவும்.
- ஹேசல் எட்வர்ட்ஸ்

உங்களை நேசிக்கும் வாடிக்கையாளர்கள், உங்களை நீங்களே சந்தைப்படுத்துவதை விட, அதிக சக்தி வாய்ந்த சந்தைப்படுத்துவார்கள்.
- ஜீன் ப்ளீஸ்

வெற்றிகரமான வணிகங்கள் கண்டுபிடித்த மந்திரச் சூத்திரம், வாடிக்கையாளர்களை விருந்தினர்களாகவும், பணியாளர்களை மக்களைப் போலவும் நடத்துவதாகும்.
- டாம் பீட்டர்ஸ்

சிறந்த வாடிக்கையாளர் சேவை என்பது வாடிக்கையாளர் எப்போதும் சரியானவர் என்று அர்த்தமல்ல, வாடிக்கையாளர் எப்போதும் மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.
- கிறிஸ் லோகுர்டோ

வாடிக்கையாளர் சேவை ஒரு துறையாக மட்டும் இருக்கக்கூடாது, அது முழு நிறுவனமாக இருக்க வேண்டும்.
- டோனி ஹெஸி

உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், உங்கள் போட்டியாளர் அதைச் செய்வார்.
- பாப் ஹூய்

திருப்தியடைந்த வாடிக்கையாளரே, அனைத்திலும் சிறந்த வணிக உத்தி.
- மைக்கேல் லெபோஃப்

எப்போதும் வாடிக்கையாளருக்கு முதலிடம் கொடுத்தால், வெற்றி உங்களுடையதாக இருக்கும்.
- ரே க்ரோக்

சரியான ஊழியர்களைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும், சரியான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் வைத்திருப்பதற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், பதில் எல்லாமே.
- ஃபிரடெரிக் ரீச்ஹெல்ட்

உங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதைப் பாதிக்கிறது.
- மர்லின் சட்டில்

வாடிக்கையாளருடன் நாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு தொடர்பும் அவர்கள் திரும்பி வருவார்களா இல்லையா என்பதாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் சிறந்து விளங்க வேண்டும் அல்லது அவர்களை இழக்க வேண்டியிருக்கும்.
- கெவின் ஸ்டிர்ட்ஸ்
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.