* நடக்காது என்ற காரியம்தான் எப்பொழுதும் நடைபெறுகின்றது.
* மனத்தின் உறக்கமே சோம்பல்.
* நல்ல சொற்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் மெளனமாக்குகின்றன.
* இழைக்கப்பட்ட இன்னல்களை மணலில் எழுதவும், செய்த நன்மைகளைப் பளிங்கில் எழுதவும்.
* ஒவ்வொரு சொல்லாகச் சேர்ந்து நூல் உருவாகின்றது.
* பொறுமை கசப்புத்தான்; ஆனல், அதன் கனி இனிப்பானது.
* உணர்ச்சிமயமாயிருப்பவர்களை எங்கு வேண்டுமானலும் துக்கிச் செல்லலாம்.
* மனிதர்கள் பேசுவதற்குத் திறமையில்லாமலும், பேசாமலிருப்பதற்கு நிதானமில்லாமலும் இருக்கும் பொழுது, பரிதாபமாயிருக்கிறது.
* செருக்கும் தற்பெருமையும் மனிதனின் ஆதிப் பாவம்.
* பிச்சைக்காரன் பணக்காரனால் அவன் பெருமிதத்திற்கு அளவேயிராது.
* உன்னை ஆட்டுக்குட்டியாக ஆக்கிக்கொண்டால், ஒநாய் உன்னைத் தின்றுவிடும்.
* விளக்கொளியில் உண்மையாகத் தோன்றியது சூரிய வெளிச்சத்தில் மாறவும் கூடும்.
* செல்வத்தினும் உயர்ந்தது மனநிறைவு.
* மனச்சாட்சி இல்லாதவன் ஒன்றுமில்லாதவன்.
* பண்பு எப்பொழுதும் சிறுபான்மைக் கட்சியாகவே இருக்கும்.
* வல்லமையுள்ளவர்களின் வாதங்களுக்கே எப்பொழுதும் மதிப்பு அதிகம்.
* பழமொழியால் திருடனும் அறிவாளியாவான்.
* ஒடினால் மட்டும் போதாது; உரிய காலத்தில் புறப்படவும் வேண்டும்.
* நிறையச் சிந்தனை செய்யுங்கள், குறையப் பேசுங்கள். அதிலும் குறைய எழுதுங்கள்.
* கலைஞனைக் காப்பாற்ற முடியாத கலை அற்பமானதுதான்.
* சிலைகள் செய்யும் சிற்பிக்குத் தன்னைச் சிலை செய்து வைத்துத் கொள்ளும் அவசியமில்லை.
* மூடனுக்கும் தன்னைப் போற்றும் பெரிய மூடன் கிடைத்து விடுகிறான்.
* சாதாரணப் புத்தியால் செய்ய முடியாததைச் செய்வதுதான் வேகம்.
* ஒரு மனிதனே அறிய, அவன் பதில்களை விட்டுவிட்டு, அவன் கேள்விகளைக் கவனிக்கவும்.
* அதிகப் படிப்பும் மிகக் குறைந்த படிப்பும் மனவளர்ச்சிக்கு இடையூறுகள்.
* அழகானதை நாம் பற்றிக் கொள்கிறோம்; பயனுள்ளதைத் தள்ளி விடுகிறோம்.
* நான் நம்புகிறவர்களிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றட்டும்.
* பெரும்பாலான மனிதர்கள் மேலும் நம் உதவிகளைப் பெறுவதற்காகவே நன்றி காட்டுகின்றனர்.
* நன்றி மறத்தலே மற்றைத் தீமைகளுக்கெல்லாம் தாய்.
* அடைத்த கதவைக் கண்டு, சயித்தான் கூடப் போய்விடுவான்.
* கொடுக்கக் கூடியவனுக்கு நண்பர்கள் அதிகம்.
* துக்கத்தை இழந்தவன் நிறைந்த லாபத்தை அடைந்தவன்.
* தான் இன்பமாயிருப்பதாக எண்ணுபவனே மகிழ்ச்சியுள்ளவன்.
* சிரிக்காத நாள் வீணாய்ப் போன நாள்.
* இன்பம் என்பது பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது.
* சொற்ப இன்பம், நீண்ட துயரம்.
* வாழ்க்கையில் வாழ்வதைக் காட்டிலும் செயல்தான் அவசியம்.
* வறுமை ஒரு வகையான தொழுநோய்.
* பெரிய மனிதனுக்கு உன் பணத்தைக் கடகைக் கொடுக்க வேண்டாம்.
* தீய வழியில் வந்த செல்வம் செழிப்பதில்லை.
* பணம் அறிவாளர்களுக்கு அடங்கித் தொண்டு செய்யும்; ஆனல் மூடர்களை ஆட்சி செய்யும்.
* செல்வனுக்குத் தன் நண்பர்கள் எவர்கள் என்று தெரியாது.
* பல மனிதர்கள் நோய்களால் மடிவதில்லை, தாம் உண்ட மருந்து களாலேயே மடிகின்றனர்.
* குருடன் கொடி பிடித்துச் சென்றால், அவன் பின்னால் செல்பவர்களுக்கு ஆபத்துதான்.
* இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும்!