எல்லோரையும் நம்பலாமா?

காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
- லெனின்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
- பெர்னாட்ஷா

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும் விட வேறொன்றுமில்லை.
- ஆல்பர்ட் ஸ்வேசர்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன. சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன. பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
- முகமதுநபி

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
- ஆப்ரகாம் லிங்கன்

சுவர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே தேவை.
- டிரைடன்

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக் கொள்.
- பைபிள்

மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல்.
-
பைரன்

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

நட்பு என்பதும் நம்பிக்கை. கற்பு என்பதும் நம்பிக்கை. முயற்சி என்பதும் நம்பிக்கை. நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை.
- கவிஞர் வைரமுத்து

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
- எட்மண்ட் பர்சி

மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்.
- மாண்டேகு

ஒருவன் கற்பிக்கும் போது இருவர் கற்றுக் கொள்கின்றனர்.
- ராபர்ட் ஹாஃப்

குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்.

மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
- ஷோபா டே

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்.

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
- வைரமுத்து.

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
- ஜெனீக்கா.

அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்.
- பப்ளியஸ்ஸிரஸ்.

ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
- ஹோம்ஸ்.

உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
- கதே.

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
- பிளினி.

வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
- அன்னிபெசண்ட்.

தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
- சுவாமி சுகபோதானாந்தா.

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
- புல்லர்.

கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.
- பிராங்க்ளின்.

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
- ராமதாசர்.

வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
- ஹாப்பர்.

மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
- சைரஸ்.

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
- மாத்யூஸ்.

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
- ஆரோன்புர்.

அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
- ஜேம்ஸ் ஆலன்.

உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
- எமர்சன்.

முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
- யூரிபிடிஸ்.

விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
- வால்டேர்

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
- கன்பூசியஸ்

எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
- கெம்பில்

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
- ஆலன் ஸ்டிரைக்

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
- அன்னை தெரசா

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
- லியோ டால்ஸ்டாய்

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
- ஐன்ஸ்டைன்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- சார்லஸ்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.