மனிதனைக் கொல்வது எது?

எந்த மனிதனும் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்வதைக் காட்டிலும், மற்றவர்களால் ஏமாற்றப் பெறுவதில்லை .
- கிரேவில்லி

அறிவாளிக்குத் தன் அறியாமை தெரியும், மூடன் தனக்கு எல்லாம் தெரியுமென்று எண்ணுகிறான்.
- சிம்மன்ஸ்

வேகமாகச் சேர்ந்த செல்வங்கள் குறைந்துவிடும் சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும்.
- கதே

ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும், ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை.
- இப்ஸன்

விஷயங்களை மதிப்பிட்டுப் பேச முடியாத பேச்சாளன், கடிவாளமில்லாத குதிரை.
- தியோஃபிரேஸ்டன்

அதிக வேலையாக அலைபவர்களுக்குக் கண்ணிர் விட நேரமில்லை.
- பைரன்

குற்றத்திற்குத் தண்டனை அளித்தால் குற்றவாளிக்கு மட்டும் கேவலம் அளிக்காவிட்டால் சமூகம் முழுவதற்கும் கேவலம்.
- பிளம்மென்

சிறைகள் பள்ளிக்கூடங்களுடன் சேர்ந்தவை; பள்ளிக்கூடங்கள் குறைந்தால், சிறைகளை அதிகமாக்க வேண்டியிருக்கும்.
- ஹொரேஸ்மான்

கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை.
- கன்பூசியஸ்

தன்னைப் பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும். அதிகத் தாழ்வாக எண்ணுவதும், இரண்டுமேத் தவறுதான்.
- கதே

உன்னை நீயே மதித்துக் கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால், அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை.
- ஸெனிகா

தன்மானம். தன்னறிவு. தன்னடக்கம் - இம்மூன்றுமே வாழ்க்கையில் தலைச்சிறந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை.
- டென்னிஸன்

ஒழுக்கமில்லாமல் சமயமில்லை. சமயமில்லாமல் ஒழுக்கமில்லை.
- ஜி. ஸ்பிரிங்

ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருத்தல் வேண்டும்.
- பிராங்க்வின்

ஒய்வும் உழைப்பும் மாறி மாறி இருந்தால், நீண்ட நாள் அவை நிலைத்திருக்கும்.
- ஒவிட்

சிறு கடன் ஒரு கடன்காரனை உண்டாக்கும். பெருங்கடன் ஒ. பகைவனை உண்டாக்கும்.
- பப்ளியஸ் ஸைரஸ்

மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களையெல்லம் படித்துப் பார்த்தல் தலைச் சிறந்த மருந்தாகும்.
- ஷென்ஸ்டள்

நம்மை மனிதர்களாக்குவது உதவிகளல்ல. தடைகள்: வசதிகளல்ல. கஷ்டங்கள்.
- மாத்தியூஸ்

இயற்கையாகப் பெருமை ஏற்படுவதை விட அதிகமான மக்கள் கருத்துடன் கற்பதால் மேன்மையடைகின்றனர்.
- ஸெனிகா

வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்.
- பீச்சர்

வாழ்வதில் நான் என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், முறையாக வாழ்வதில், நான் என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- மகா அலெக்ஸாண்டர்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.