* எதிர்ப்பு இல்லாவிட்டால், பண்பு வாடி உதிர்ந்துவிடும்.
* தங்கத்தினும் மதிப்புக் குறைந்தது வெள்ளி; தங்கத்திலும் மதிப்பு உயர்ந்தது பண்பு.
* மனிதனின் நடத்தையே அவனுடைய அதிருஷ்டத்தைத் தீர்மானிக்கிறது.
* மாசற்ற மனச்சாட்சி பித்தளைச் சுவராகும்.
* மனச்சாட்சியில் பட்ட மருவும் ஒரு புண்தான்.
* பேறுகளில் சிறந்தது நிறைவுள்ள மனம்.
* நீ ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், அவமானம் அவமானமே.
* மிகவும் மோசமான கேவலம் வறுமைதான்.
* ஆற்றலுள்ளவன், பலாத்காரத்தால் முடிக்க முடியாததை, அன்பு வழியில் செய்து முடிக்கலாம்.
* ஒரு பொய்யை மிதித்துக் கொண்டு அடுத்த பொய் வரும்.
* உன்னிலும் மேலாயிருப்பவர்களுக்கு இடம் விடு.
* செருக்கை விடப் பணிவு அதிக ஆதாயமடைகின்றது.
* பழக்கமே, பின்னால் குணமாக அமையும்.
* ஆணியை ஆணியால் அகற்றுவது போல், பழக்கத்தைப் பழக்கத்தால் நீக்க வேண்டும்.
* முயற்சி செய்கிறவரையில் எவருக்கும் தம் திறமை தெரியாது.
* ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றில் அதிகத் திறமை பெற்றிருப்பர், மற்றொருவர் அதிலேத் தோல்வியுறுவர்.
* ஆராய்ச்சி அறிவில்லாத உடல் வலிமை தன் கனத்தாலேயே தாழ்வுற்று விடும்.
* வல்லமை மிகுந்தவனே வெல்கிறான்.
* ஒருவன் பலவீனமாயிருந்தால் அவனை ஆண்டு அடக்க ஒருவன் வந்தேத் தீருவான்.
* மூடன் வாயை மூடிக் கொண்டிருந்தால், ஞானியாகக் கருதப்படுவான்.
* நாவாகிய பேனாவை இதயத்தின் மையில் தோய்த்து எழுத வேண்டும்.
* புகழத் தெரியாதவனுக்குப் பேசவேத் தெரியாது.
* செய்ய வேண்டிய கடமையைச் செய்வதில் நமக்குப் பாராட்டுக் கிடையாது.
* கீழே நிலமுள்ளவனுக்கு அந்நிலத்திற்கு மேலே வானம் வரை சொந்தம்.
* பிறந்தால் அரசனாகப் பிறக்கவேண்டும், அல்லது மூடனாய்ப் பிறக்க வேண்டும். எல்லையற்ற உரிமை கிடைக்கும்.
* சோம்பேறி மூச்சு விடுகிருன், ஆனால் வாழவில்லை.
* அதிருஷ்டம் வீரர் பக்கமே நிற்கும்.
* அபாயமில்லாமல் அபாயத்தைத் தாண்ட முடியாது.
* அபாயங்களைக் காட்டிலும் அச்சங்கள் அதிகம்.
* தீயோரைத் தடுத்து வைப்பது இரக்கமன்று, அச்சம்தான்.
* மகாவீரர்களும் திடீரென்று தோன்றும் அபாயங்களுக்கு அஞ்சுவர்.
* கெளரவம் மனிதனின் பழக்கங்களை மாற்றிவிடும்.
* எல்லோராலும் புகழப்பெறும் ஒருவரால் புகழப்பட்டால் , நான் மகிழ்ச்சியடைகிறேன்.
* செய்யவேண்டிய கடமையைச் செய்வதில் நாம் புகழுக்கு உரியவரல்லர்.
* உழைக்கவே பிறந்த நீ ஒய்வை ஏன் தேடுகிறாய்?
* பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகானில்லை.
* காலத்தைப்போல் பழிவாங்குவது வேறு எதுவுமில்லை.
* வயலுக்கு ஒய்வு கொடுத்தால், அதிக விளைச்சல் காணும்.
* அதிக வேலைக்காரர்கள் அதிக எதிரிகள்.
* பிறருக்குச் சொல்லிக் கொடுக்காமல் கட்டி வைத்திருக்கும் அறிவு பயனற்றது.
* ஒருவன் நஷ்டமில்லாமல் ஆதாயமடைய முடியாது.
* இரகசியத்தைக் காப்பதை விட வாயில் தீயை அடக்கிக் கொள்ளல் எளிது.
* பையில் காசு தட்டிப்போனபின், சிக்கனம் செய்தல் பயனில்லை.
* ஆமையைக் கடித்த ஈக்கு வாய்தான் வலிக்கும்.
* கதிர் முற்றிவிட்டால், அறுவடையை நாளைக்கு என்று ஒத்தி வைக்கக் கூடாது.
* கொடுக்க முடியாத கடன்காரரிடம் கிடைத்தது ஆதாயம்.
* பரம ஏழைக்கு கடனே இராது.
* சாப்பாட்டில் கூச்சம் வேண்டாம்.
* என் கைகளையும் கால்களையும் கட்டினலும், என்னை என் மக்களுள்ள இடத்தில் தள்ளி விடுங்கள்.
* போர் நடக்கும் பொழுது சட்டங்கள் ஊமைகளாகி விடுகின்றன.
* அமைதியான காலத்தில் சிங்கங்களாய் இருப்பவை, போரில் மான்களாக இருக்கும்.