
ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய தலைசிறந்த ஆசிரியர் அவசியம் என்பதுதான்.
- லாநோன்

அவதூறு கடல்களையும். மலைகளையும், பாலைவனங்களையும் எளிதில் தாண்டிச் செல்லும்.
- கோல்டன்

பொய்யைத் துரத்திக்கொண்டு ஓடாதே நீ அதை விட்டுவிட்டால், அது விரைவில் தானாகவே செத்துவிடும்.
- இ. நாட்

உண்மையாயிருக்கத் தகாத விஷயத்தைப் பொய்யென்றே நம்பு.
- ஷெரிடன்

உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான் தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான்.
- லிம்மன்ஸ்

இயற்கை அளிக்கும் முதல் பரிசு, அழகு. அது முதலாவது பறித்துக் கொள்வதும் அதைத்தான்.
- மெரே

அழகு பஞ்சாங்கத்தைப் போன்றது. அது ஒரு வருடம் நிலைத்திருந்தால் நல்லதுதான்.
- டி ஆடம்ஸ்

எல்லோரும் தர்மத்திற்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பிறகு விலகிப் போய்விடுவார்கள்.
- டிஃபினோ

ஏதாவது ஒரு கொள்கைக்காக வாழுங்கள். நன்மையைச் செய்யுங்கள்: காலத்தின் புயல்கள் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை உங்களுக்குப் பின்னால் விட்டுச் செல்லுங்கள்.
- சால்மர்ஸ்

அறியாமையால் ஆணவம் வளரும் ஆகக் குறைவான அறிவுடையவரே அதிகம் தெரிந்ததாகப் பாவனை செய்வர்.
- கே

இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளுங்கள். முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார். இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான்.
- போப்

வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை,
- ரஸ்கின்

ஊதாரித்தனமாகச் செலவழிப்பவன் தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான்: உலோபி தன்னையேக் கொள்ளையடிக்கிறான்.
- புருயோ

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள்.
- ராபர்ட் கோலியர்

வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உயர்ந்த நிலையை அடைய முடியும், அதற்குக் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது.
- ஜான்லைன்

பாவங்களுக்கெல்லாம் அடிப்படை இறை நம்பிக்கையின்மை
- பார்ரோ

தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது.
- அ மார்க்கஸ் அன்டோனியஸ்

இன்பம் துய்ப்பதில் தன்னை அடக்கிக்கொள்வதே நல்ல விதியாகும்.
- வாண்டன்

வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது.
- லாங்.:பெல்லோ

பேச்சில் தீமை கலந்துவிட்டால், மனத்திலும் தீமை கலந்துவிடும்.
- ஸெனின்

துன்பத்திற்காக இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்வ இயல்பு.
- அ எச் மான்

உனது திருப்திக்காக உணவருந்து. ஆனால், பிறருடைய திருப்திக்காக உடை அணிந்துகொள்.
- ஃபிராங்கலின்

உணர்ச்சிகள் நம்மை உணரச்செய்கின்றன. ஆனால், தெளிவாகப் பார்க்கும்படி செய்வதில்லை.
- அ மான்டெஸ்கியு

சிங்கத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு போதும், மனிதனுக்கும் அந்த அளவே போதும்.
- ஜி. ஃபார்டைஸ்

உடல் நலத்திற்காக மருந்துகளை நிறுத்தோ, அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு உண்ண வேண்டும்.
- ஸ்கேஸ்டன்

பலர் உழைப்பில் பங்கெடுத்துக்கொண்டால், வேலை எளிதாகி விடும்.
- ஹேமர்

உலகின் தேவை நல்ல முறையில் உபதேசம் செய்வதன்று: ஆனால், நல்ல முறையில் கேட்பதுதான்.
- போர்ட்மன்

உயிரோடிருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது வடிகட்டிய சுயநலமாகும்.
- கோல்டன்

உரையாடலில் முதல் தேவை. உண்மை; அடுத்தது. நல்ல பொருள்: மூன்றாவது, நகைச்சுவை நான்காவது, சாதுரியம்.
- சர் வில்லியம் டெம்பிள்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.