கல்வி குறித்தப் பொன்மொழிகள்

 ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவிதப் பயன்பாடும் கிடையாது!
- காந்தியடிகள்
 கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.
- தந்தை பெரியார்
 இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்!
- யூரிபிடிஸ்
 கற்காமல் இருப்பதை விடப் பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!
- பிளேட்டோ
 கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!
- எட்மண்ட்பர்க்
 கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்!
- ரஸ்கின் பாண்ட்
 வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!
- பெர்னார்ட்ஷா
 நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்!
- மூர்
 சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!
- போலிங் புரூக்
 தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!
- பெஸ்டலசி
 ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
- ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
 நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்றலே சிறப்பு. அதுவே இயற்கை முறை .
- திரு. வி. கலியாணசுந்தரனார்
 கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.
- மாஜினி
 கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்றை மூடுபவன்.
- விக்டர் ஹூகோ
 அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம்.
- ஆவ்பரி
 கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதேயாகும்.
- ரஸ்கின்
 ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும்.
- பர்க்
 சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.
- மில்டன்
 இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.
- யுரீப்பிடீஸ்
 யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார்.
- கதே
 இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு- பிறரிடம் பெறுவது ஒன்று; தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது.
- கிப்பன்
 அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான்.
- லிச்சென்பரி
 கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது.
- டெம்பிள்
 நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.
- ஸ்காட்
 ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
 ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி கல்வி போதிக்க வேண்டாம்; ஆனால், மனிதனாகவும். ஸ்திரீயாகவும் இருக்கக் கற்பியுங்கள்.
- ஹொபரிட் ஸ்பென்ஸர்
 ஒவ்வொரு தேசத்தின் மக்கட் சமுதாயத்தினுடைய பாதுகாப்பும் கதியும் மக்களுக்கு அளிக்கும் நிறைவுள்ள கல்வியைப் பொறுத்தேயுள்ளன.
- கோஸத்
 பள்ளிக்கூடங்களே மக்கள் ஆட்சி முறையில் அமையும் கோட்டைக் கொத்தளங்கள்.
- ஹொரேன் மான்
 முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும்.
- எச். ஜி. வெல்ஸ்
 கல்வியின் முழுநோக்கம் மனவளர்ச்சி.
- ஷெர்வுட் ஆண்டர்ஸன்
 கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது.
- எமர்ஸன்
 பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும்.
- நெப்போலியன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|