முத்துக்கமலம் இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி, பிசப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி ஏ+)யில் தமிழ்த் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயின்ற மாணவி பெ. கீதா (பதிவு எண் 7TM124102) "முத்துக்கமலம் இணைய இதழ் உள்ளடக்கப் பகுப்பாய்வு” எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) பட்டம் பெற்றிருக்கிறார். திருச்சிராப்பள்ளி பிசப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி ஏ+)யில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் இரா. விஜயராணி அவர்கள் இவரது ஆய்விற்கான நெறியாளராகச் செயல்பட்டார்.
ஆய்வாளர் பெ. கீதா அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிட முத்துக்கமலம் இணைய இதழ் குழுவின் இனிய நல்வாழ்த்துகள்.
ஆய்வு நெறியாளராகச் செயல்பட்ட முனைவர் இரா. விஜயராணி அவர்களுக்கு முத்துக்கமலம் இணைய இதழ் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.