முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்
சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் உயராய்வு மையம் வழியாக முனைவர் பட்ட (பகுதிநேர) ஆய்வு மாணவராகச் சேர்ந்து பயின்று வரும் தேனி மாவட்டம், வீரபாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி. மு. ரேணுகாதேவி (வடுகபட்டி, தேனி மாவட்டம்) அவர்கள் "முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்" எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை (Ph.D.,) மேற்கொண்டு வருகிறார். தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பத்மபிரியா அவர்கள் இவரது ஆய்வுக்கான நெறியாளராகச் செயல்பட்டு வருகிறார்.
முனைவர் பட்ட ஆய்வாளர் மு. ரேணுகாதேவி அவர்களது ஆய்வுப்பணி சிறப்பாக நிறைவடைந்து, முனைவர் பட்டம் பெற்று, வாழ்க்கையில் மென்மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிட முத்துக்கமலம் இணைய இதழ் குழுவின் இனிய நல்வாழ்த்துகள்.
ஆய்வு நெறியாளராகச் செயல்பட்டு வரும் முனைவர் மா. பத்மபிரியா அவர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கிய சிவகாசி தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நிருவாகத்திற்கும் முத்துக்கமலம் இணைய இதழ் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.