முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், ஒயிஸ்கா சர்வதேச நிறுவனம் (ஜப்பான்) தமிழ்நாடு கிளை, தமிழ் அநிதம் (அமெரிக்கா), உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), வல்லமை மின்னிதழ், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் நாகூர் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து 2-10-2020 முதல் 4-10-2020 வரையிலான மூன்று நாட்கள் ‘கல்வியியல்’ எனும் பொருண்மையில் இணைய வழியிலான பன்னாட்டுk மாநாடு ஒன்றினை நடத்தியிருக்கிறது.
இம்மாநாட்டிற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுக் கோவை ஒன்று வெளியிடப்பட்டது.