முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையுடன் இணைந்து 19-7-2021 முதல் 23-7-2021 வரை ஐந்து நாட்கள் ”இணைய வழி ஐந்தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம்” ஒன்றினை நடத்தியிருக்கிறது.

19-7-2021 அன்று மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் கா. பசும்பொன் அவர்கள், “மொழியும் மொழிக் கட்டமைப்பும்” எனும் தலைப்பிலும், 20-7-2021 அன்று சென்னை, பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்தின் மேனாள் நிகழ்ச்சிகள் இயக்குநர், தமிழ்நாடு அரசின் முதல் கம்பர் விருதாளர் கலைமாமணி முனைவர் பால. இரமணி அவர்கள், “இயலும் தமிழால் இயலும்” எனும் தலைப்பிலும், 21-7-2021 அன்று இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகம், சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் இசைத்துறைத் தலைவர் கலாநிதி. தெட்சிணாமூர்த்தி பிரதீபன் அவர்கள், “இசை தொடர்பான சமூகப் பார்வையும், அதன் அரசியலும்” எனும் தலைப்பிலும், 22-7-2021 அன்று இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம், கலை மற்றும் கலாச்சாரப் புலம், மேனாள் புல முதன்மையர், பேராசிரியர் பால. சுகுமார் (லண்டன்) அவர்கள், “ஈழத்துக் கூத்து மரபு” எனும் தலைப்பிலும், 23-7-2021 அன்று சிவகங்கை மாவட்டம், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் கணினியியல்துறைத் தலைவர் முனைவர் கே. கலா அவர்கள், “தரவு அறிவியல்” எனும் தலைப்பிலும் சிறப்புரைகளை வழங்கினர்.

இக்கருத்தரங்கத்திற்கு அனுமதியளித்த கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் இரா. ஜெகநாத் அவர்களுக்கு நன்றி. என்னுடன் இணைந்து ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி. கலாவதி அவர்களுக்கு நன்றி.