கோயம்புத்தூர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை (சுயநிதிப்பிரிவு), முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், தமிழ் ஆய்வு அறக்கட்டளை - சூலூர், முத்தமிழச்சங்கம், பிரான்சு இணைந்து 6-3-2025, வியாழக்கிழமையன்று “நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சாரத்தில் இந்திய அறிவு அமைப்பு” (International Conference On Indian Knowledge System In Folklore And Culture) எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தியது.
இக்கருத்தரங்கத்திற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுக் கோவை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வுக்கோவையினைப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் சென்று, 2025 - கட்டுரைத் தொகுப்புகள் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும், 'நாட்டுப்புறவியல் மற்றும் கலாச்சாரத்தில் இந்திய அறிவு அமைப்பு (கருத்தரங்க ஆய்வுக்கோவை)’ எனும் பெயரிலோ அல்லது அதன் மேலிருக்கும் நூலின் அட்டைப்படத்திலோச் சொடுக்கி, அங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.