கோயம்புத்தூர், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, தெய்வத்திருப்பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மெய்ப்பொருளியல் உயராய்வு நடுவம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து, ‘பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள்’ எனும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் 20-9-2025 அன்று கல்லூரியின் முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்வு செய்யப்பெற்ற 155 கட்டுரைகள், ஆய்வுக்கோவை தொகுதி - 1ல் 75 கட்டுரைகள், ஆய்வுக்கோவை தொகுதி - 2ல் 80 கட்டுரைகள் என்று இரண்டு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டு, பேரூராதீனக் கல்வி நிறுவனங்களின் மேன்மைமிகு தலைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களால் வெளியிடப்பட்டன.
இந்த இரு ஆய்வுக்கோவையினைப் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் சென்று, 2025 - கட்டுரைத் தொகுப்புகள் எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்றிருக்கும், ‘பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள் - தொகுதி 1’ மற்றும் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழிலக்கணங்கள் - தொகுதி 2’ எனும் பெயரிலோ அல்லது அதன் மேலிருக்கும் ஆய்வுக்கோவையின் அட்டைப்படத்திலோச் சொடுக்கி, அங்கிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தகவல்: உ. தாமரைச்செல்வி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.