சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)
முனைவர் நா. சுலோசனா
சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் நா. சுலோசனா, தமிழ்ப்பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். மேலும், இவர் மொழியியல் பாடத்திலும் முதுநிலைப்பட்டம் (M.A) பெற்றிருக்கிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டுத் தர எண்ணுடன் (ISBN) கூடிய பன்னாடு மற்றும் தேசியக் கருத்தரங்கக் கட்டுரைகளாக 59 கட்டுரைகளும், பன்னாட்டுத் தர வரிசை எண்ணுடன் (ISSN) வெளியாகும் இதழ்களில் 23 கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. 75க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகள், 20க்கும் மேற்பட்ட பயிலரங்குகள், 20க்கும் மேற்பட்ட மாநாடுகள் போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறார்.இவர், 5 பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், 1 தேசியக்கருத்தரங்கம், 2 பயிலரங்கம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 10 பேர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 17 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். மூன்று பேர் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இவை தவிர,“திராவிட வேரும் விழுதுகளும்”, “செவ்விலக்கியச் சாரம் (பன்முக நோக்கில்)”, “இலக்கணம் - இலக்கியம் - மருத்துவம் (குறிஞ்சிப்பாட்டு மலர்த்திரள்)” , “பெருஞ்சித்திரனார் மொழி - இனம் - நாடு”, “பழந்தமிழர் மொழியும் தகவல் பரிமாற்றமும்”, “பாவாணர் கோட்டமும் பாசறையும்” எனும் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பெற்றுள்ள அறக்கட்டளைகளில் 8 அறக்கட்டளைகளின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த அறக்கட்டளைகளின் பொறுப்பாளராக இருந்து, பொதுப்பதிப்பாசிரியர் எனும் நிலையில் 18 நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். இவரது தமிழ் மற்றும் கல்விச் சேவையினைப் பாராட்டி, பெரியாரியல் விருது (பெரியாரியல் ஆய்வு நடுவண் மையம், 2010), ஆய்வுச் சிற்பி விருது (நாமக்கல் கண்ணாதாசன் தமிழ்ச் சங்கம், 2013), தமிழ்ச்சுடர் விருது (2007), இதயக்கனி விருது (காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ்ச் செம்மொழி கலை வளர்ச்சிச் சங்கம், 2017), ஆய்வு மாமணி விருது (செந்தமிழ் அறக்கட்டளை, 2017), பாரதி விருது ( தமிழ் இலக்கிய மையம், 2018), இளம் தமிழ் ஆய்வாளர் விருது (தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை, 2018), தமிழ்ச் சான்றோர் எனும் பாராட்டு (பூவைத் தமிழ்ச் சங்கம், சென்னை, 2017), பாரதி உலா விருது (2018), அம்மா விருது ( அம்மா இலக்கியப் பேரவை, 2019), குறள்மலைச் செம்மல் விருது (2019) போன்றவை வழங்கப் பெற்றிருக்கின்றன.
முனைவர் நா. சுலோசனா சுய விவரக் குறிப்பு (பிடிஎப் கோப்பு)
* * * * *
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|