சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)

முனைவர் த. கண்ணன்
தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்துச்சுவடித்துறையில் பேராசியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் த.கண்ணன், தமிழ் இலக்கியத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களையும், வரலாறு, மொழியியல் பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களை ஆய்வுக்களமாகக் கொண்டு 70 கட்டுரைகளை எழுதியுள்ளார். சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் காப்பியப் பதிப்புகள் குறித்து இரண்டு நூல்களையும் தந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருமலையிலுள்ள அருள்மிகு பாகம்பிரியாள் உடனாய மலைக்கொழுந்தீசுவரா் திருக்கோயில் மற்றும் அக்கோயில் சார்ந்த பகுதிகளை வரலாறு மற்றும் தொல்லியல் நோக்கில் ஆராய்ந்து நூலாக வெளியிட்டுள்ளார். ஆவணங்கள், அரிய தாள் சுவடிகளை ஆராய்ந்து 15 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மாராத்தி மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோடி என்னும் எழுத்துருவில் புலமை பெற்றுள்ளார். மோடி ஆவணங்களை ஆராய்ந்து 8 ஆய்வுக் கட்டுரைகளையும் இரண்டு ஆய்வுத் திட்டங்களையும் முடித்தளித்துள்ளார். மோடி ஆவணங்களை கணினி வழி ’ஆவணப்படுத்தும் ஆய்வுத் திட்டத்தையும் தற்போது மேற்கொண்டு வருகிறார். சுவடிக்கணிதங்கள் குறித்தும், தமிழ் எண்கள் குறித்தும் ஆராய்ந்து அவற்றை இணைய இதழ்களில் கட்டுரைகளாக அளித்து வருகிறார்.
தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த வாசிப்புடைய இவர், ஆசிரியர் திறன் மேம்பாட்டு உரைகளையும் புத்தொளிப் பயிற்சி உரைகளையும் வழங்கி வருகிறார். இவரது உரைகளில், தமிழ் இலக்கிய ஆய்வுப் போக்கில் நிகழ்த்தப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்த சிந்தனைகள் மிகுந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் 19 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள இவரின் நெறியாளுகையின் கீழ், 11 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், 3 ஆய்வாளர்கள் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.
முனைவர் த. கண்ணன் (முழு சுயவிவரக் கோப்பு)
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|