துணை ஆசிரியர் (கதை, கவிதை உள்ளிட்ட பிற பகுதிகள்)

கவிஞர் வி. எஸ். வெற்றிவேல்
தேனியிலுள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சிறுசேமிப்பு முகவராகப் பணியாற்றி வரும் கவிஞர் வி. எஸ். வெற்றிவேல் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயறகுழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கவிதை மற்றும் நாடக நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் இவர் பல்வேறு மேடை நாடகங்களை எழுதி, நடித்து இயக்கியிருப்பதுடன் சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், தனது நடிப்பு, கவிதை, நாடகப் பணிகளுக்காகப் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளின் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை வழங்கும் ‘கலை முதுமணி’ விருதையும் இவர் பெற்றிருக்கிறார். முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|