இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
கிறித்தவ சமயம்

வேதாகமத்தில் சீடர்கள்

பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.


ஏட்டுக் கல்வி இல்லாத அந்தக் காலத்தில், கல்வியானது 'குரு - சீடர்' உறவின் அடிப்படையில், முக்கியமாகச் சமயங்களில் (இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் போன்றவைகளில்) வழக்கத்தில் இருந்தது. சமய குருவின் ஆசிரமத்தில் சீடர்கள் தங்கியிருந்து சமயக் கோட்பாடுகளையும் இறைவனைப் பற்றிய செய்திகளையும் பயின்றனர். இயேசுவானவர் தன்னுடைய இப்பூலோகப் பணிக்காலத்தில் சீடர்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குப் போதனைகளை நேரடியாகவும், கதைகள், உவமைகள், செய்முறை பயிற்சி மூலமாகவும் கூறி வந்தார்.

பெண் சீடர்கள்

நற்செய்தி நூல்களில் வரும் பெண்களின் சீடத்துவம் ஆக்கப்பூர்வமான முன்மாதிரியானது.

பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களிலிருந்தும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகத்தான மரியாவும், யோவன்னாளும், சூசன்னாளும், மேலும் பல பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். (லூக் 8: 2-3) பெயர் அறிவிக்கப்படாத பெண் ஒருவர் இயேசுவை விலை உயர்ந்த நறுமணத் தைலத்தால் பூசுகிறார் .(மாற் 14: 3-9)

‘........ அவர் கலிலேயாவிலிருந்த போது அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த மகதலேனா மரியாளும், ........ மரியாளும், சலோமே என்பவளும், அவருடனே கூட வந்திருந்த அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்” என மாற்கு நற்செய்தியின் பிற்பகுதியில் கூறப்படுகிறது. (மாற் 15: 40-41)

இயேசு கைது செய்யப்பட்டதை அறிந்ததும் பன்னிரு சீடர்களும் கோழைகளைப் போலத் தப்பி ஓடிவிட்டனர் (மாற் 14: 50). ஆனால் இயேசுவின் பின்சென்ற பெண்களோ, அவர் சிலுவையில் அறையப்பட்டுத் துன்புற்ற வேளையிலும் கூட அவரோடு இருந்தனர். அவர் இறப்பதை அவர்கள் கண்களால் கண்டனர். அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிய போதும் அவரோடு இருந்தனர். அவரை அடக்கம் செய்த இடத்தையும் பார்த்தனர். வாரத்தின் முதல் நாளன்று இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையானது வெறுமையாய் இருந்ததையும் பெண்கள் கண்டனர்.

பெண் சீடருள் புகழ் பெற்றவர் மகதலேனா மரியாள். இறந்த இயேசு உயிர் பெற்றுவிட்டார் என்ற உண்மைக்கு இவரே முதல் சான்று(மாற் 16: 9-11)

கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு. இயேசுவே துன்பங்களுக்கு ஆளானார். அதுபோலவே இயேசுவின் பின்சென்ற பெண் சீடர்களும் துன்பங்களுக்கு நடுவிலும் இறுதிவரை நிலைத்து நின்றனர்.

ஆண் சீடர்கள்

மாற்கு நற்செய்தி நூலில் இயேவை உயிரோட்டத்தோடு சித்தரிக்கும் மாற்கு, அவரது சீடர்களின் குணநலன்களையும் மிகவும் தெளிவாகவும் கருத்தாகவும் விவரிக்கிறார். ஆரம்பகாலத்தில் சீடர்கள் மிகுந்த உற்சாகத்தோடுதான் இயேசுவின் அழைப்பை ஏற்றனர்; அவரைப் பின் தொடர்ந்து செல்லவும் தொடங்கினர். (மாற் 1: 16-20) இயேசுவோடு இருக்கவும், அவரது பணியில் பங்கேற்றுக் கடவுளின் ஆட்சிபற்றி போதிக்கவும், வியாதிகளைக் குணமாக்காவும், பேய்களைத் துரத்தவும் ஆர்வத்தோடுதான் முன்வந்தனர். (மாற் 3: 14-15)

ஆனால் நிகழ்வுகள் தொடரத் தொடர, இயேசுவோடு மிகவும் நெருக்கமாகப் பழகிய அவருடைய சீடர்களே, இயேசு யார் என்றும், அவருடைய போதனைகள் என்னவென்றும் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள். இதன் தாக்கம் இயேசுவை வருத்தமுறச் செய்கிறது. அதனால் இயேசு, ‘இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?” என்றும், மேலும், அவர்களை நோக்கி, 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்கிறார். (திருவிவிலியம் - மாற் 8: 17, 21)

பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாஸ்காரியோத்து இயேசுவை முத்தம் செய்து அவரைக் காட்டிக் கொடுக்கிறார். (மாற் 14: 45-46) இயேசுவானவர் பிடிபட்டதும், சீடர்களெல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். (மாத் 26: 56) இயேசுவின் முக்கியச் சீடரான பேதுரு மும்முறை இயேசுவைத் தெரியாது என்று மறுதலிக்கிறார். (மத் 26: 74-75) இவ்வாறு படிப்படியாக சீடர்கள் நலமான முன்மாதிரியிலிருந்து நலமற்ற முன்மாதிரிகளாய், அறிவு மழுங்கியவர்களாய், கோழைகளாய்ப் பின்பற்றத்தகாத வழிகாட்டிகளாக மாறுகின்றனர்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்

மாற்கு நற்செய்தி நூலின் கடைசி அதிகாரத்தில், உயிர்த்தெழுந்த இயேசு மூன்று சந்தர்ப்பங்களில் அவரோடு நெருக்கமாக இருந்தவர்களுக்குத் தரிசனமானார். முதல் தரிசனத்தையும் (மாற் 16: 9-11), இரண்டாவது தரிசனத்தையும் (மாற் 16: 12-13), அதாவது இயேவுவானவர் உயிரோடிருப்பதை அங்கு இருந்தவர்கள் நம்பவில்லை. மூன்றாவதாக, போஜனபந்தியில் இருந்த பதினொரு சீடருக்கும் இயேசுவானவர் தரிசனமாகி, அவர்களின் விசுவாசமின்மையும், இருதயக்கடினத்தையும் கடிந்து கொண்டதோடு, 'அவர்களை நோக்கி; நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ (மாற் 16: 15) என்றார்.

இயேசுவைச் சரியாகப் புரிந்து கொள்ளாத, அவருடைய பாடு மரணத்தில் பங்கேற்காமல் கோழைகளாய்ப் பயந்து விலகி இருந்த அவருடைய சீடர்கள், இந்தக் கட்டளையைத் தங்களின் தலையாயப் பணியாக ஏற்று, 'அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து...” (மாற் 16: 20) என்று பார்க்கிறோம்.

அநேகத் துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் (அப்போ 5: 17-42), தூய ஆவியானவரின் அருளால், அப்போஸ்தலர்களின் நற்செய்திப் பணியானது எருசலேமை மையமாகக் கொண்டு படிப்படியாக கலிலேயா, சமாரியா, யூதேயா, சிரியா, சின்ன ஆசியா, ஜரோப்பா வழியாக உலகின் மையத்திற்கே சென்று எல்லா மனிதருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது. (அப்போ 1: 8) பேதுரு அப்போஸ்தலர் ஆற்றியப் பணிகளை அப்போ: 13 முதல் 28ஆம் அதிகாரங்கள் வரையிலும் காணலாம். மற்றும் அநேக சீடர்கள் (பர்னபா, ஸ்தேபான், பிலிப்பு, சீமோன், யாக்கோபு ...) நற்செய்தி அறிவித்தலை புதிய ஏற்பாட்டில் காணலாம்.

அதன் பயனாக யூதரும், சமாரியரும், கிரேக்கரும், பிற இனத்தவரும் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இதனால் எங்கும் ஆதித்திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. 'முதல் முதல் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று’ (அப்போ 11: 26) சீடர்களிடம் நட்புறவு, இராப்போஜன ஆராதனை, ஜெபம் செய்தல், சாட்சி பகர்தல், ஊழியம் செய்தல், அன்பு செலுத்துதல் போன்ற தனித்தன்மைகள் மேலோங்கி இருப்பதைக் காணலாம். அதோடு பவுலடியாரும் அப்போஸ்தலர்களும், சபையினருக்கு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும் சபைகள் நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்து போகாதிருப்பதற்காகவும் அடிக்கடி நிருபங்கள் (கடிதங்கள்) எழுதி வந்தனர்.

வேதாகமம்

முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்த 27 நிருபங்களும், பின்னர் எழுதப்பட்ட 4 சுவிசேஷங்களும், வெளிப்படுத்தின விசேஷமும் சேர்ந்ததுதான் ‘புதிய ஏற்பாடாகும்’. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் யூத வேதத்தைப் ‘பழைய ஏற்பாடு’ என்று அழைத்தனர். மனிதனின் விமோசன மார்க்கம் இந்த இரண்டு ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கிறது என்று நம்பினர். அதனால் இந்த இரண்டு ஏற்பாடுகளையும் இணைத்து, ‘யூத - கிறிஸ்தவ வேதம்’, அதாவது இன்று நம் கைகளில் இருக்கும் வேதாகமத்தை உருவாக்கினர்.

அப்போஸ்தலர்களின் தியாக மரணம்

'என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான்” (மத் 10: 38) என்ற இயேசுவானவரின் கூற்றிற்கு இணங்க அப்போஸ்தலர்கள் தங்கள் குருவைப் போல் இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள்.

1. பேதுரு என்னும் சீமோன் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டார் (கி.பி. 64) இவரின் கல்லறை வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்திலுள்ளது.

2. செபதேயுவின் மகன் யாக்கோபு தலை கொய்யப்பட்டு இறந்தார் (கி.பி. 44) (மறைசாட்சியாக இறந்த முதல் அப்போஸ்தலர்). இவரின் கல்லறை ஸ்பெயினிலிலுள்ளது.

3. செபதேயுவின் மகன் யோவான் வயது முதிர்ந்து இறந்தார். (இயற்கை மரணம் எய்திய ஒரே அப்போஸ்தலர்). இவரின் கல்லறை துருக்கியிலுள்ளது.

4. அந்திரேயா ஓ வடிவ சிலுவையில் அறையப்பட்டார். புனித அந்திரேயா இரத்த சாட்சியான பத்திராஸ் என்னும் இடத்தில் அவரது திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.

5. பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் (கி.பி. 54). இவரின் கல்லறை துருக்கியிலுள்ளது.

6. பர்த்தலேமேயு (நத்தானியேல்) தோல் உரிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார். இவரின் கல்லறை துருக்கியிலுள்ளது.

7. மத்தேயு - கோடாரியால் வெட்டுண்டு இறந்தார் (கி.பி. 60).

8. தோமா - ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார் (கி.பி. 72). இவரின் கல்லறை சென்னை, சாந்தோம் தேவாலயத்திலுள்ளது.

9. அல்பேயுவின் மகன் யாக்கோபு சிலுவையில் அறையப்பட்டு, கல்லாலும், தடியாலும் அடியுண்டு மரித்தார்.

10. யூதா ததேயு சிலுவையில் அறையப்பட்டார்.

11. தீவிரவாதியாய் இருந்த சீமோன் சிலுவையில் அறையப்பட்டார் (கி.பி. 74)

12. யூதாஸ்காரியோத்து தற்கொலை செய்து கொண்டார். யூதாஸ்காரியோத்துக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த தியாகத்தை விடச் சிறப்பான உட்பொருளோடு கூடிய செயல் என்னவென்றால், இந்த உலகத்தில் சீடர்களை உருவாக்கியதேயாகும். இயேசுவானவர் புத்தகம் எதுவும் எழுதவில்லை. எவ்விதமான அமைப்புகளையோ ஆசிரமங்களையோ தோற்றுவிக்கவில்லை. எவ்விதமான நிலையான உருவங்களையோ, கட்டிடங்களையோ நினைவு விழா கொண்டாடும்படி விட்டுச் செல்லவில்லை. மாறாக அவர் இந்த உலகத்தில் நடைபெற வேண்டிய பணிகளை, கடமைகளை அவர் தம் சீடர்களிடம் ஒப்புவித்தார். மானுட நிலையில் மேலோட்டமாக இதைச் சிந்தித்தால், ஒருவேளை அவர் இப்பணியில் தோல்வியடைந்திருந்தால், இன்று ‘இயேசு கிறிஸ்துவின் திருச்சபை’ (கிறிஸ்து மார்க்கம்) இவ்வுலகில் நிலைத்திருந்திருக்காது.

ஒரு ‘மாடர்ன்’ குரு, ஆசிரமம் வைத்து நடத்திக் கொண்டு வந்தார். அவரிடம் கூட்டம் அலைமோதியது.

ஒருவன், பயபக்தியாக அவர் முன்னால் போய் நின்று, 'ஐயா! என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டான்.

அந்த குரு தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உன்னுடைய நோக்கம் என்ன?’ என்று கேட்டார்.

ஐயா, உங்களிடம் கொஞ்ச நாள் இருந்தால், நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வெளியில் போய் ஒரு நல்ல தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். அதுதான் என் நோக்கம்’ என்று சொன்னான்.

அதற்கு குரு, 'நீ சொல்வது சரி. ஆனால், உன்னால் இங்கே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால்... அப்போது என்ன செய்வாய்?’ என்றார்.

'அப்படி ஆனால் என்ன? உங்களை மாதிரியே ஒரு ஆசிரமம் அமைத்து... அதற்கு குருவாக நான் இருந்து விடுவேன்’ என்று யதார்த்தமாகச் சொன்னானாம்.

இன்றைய காலக்கட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரால், ஆசிரமங்கள், குருகுலங்கள், தனிமனிதர் ஸ்தாபனங்கள், தனிமனிதர் சபைகள் என்று பெருகிவிட்டன. இவர்களின் நோக்கம் என்ன என்பதில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு விழிப்புணர்வு மிகவும் தேவை.

இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனைத்துக் கிறிஸ்தவர்களும் அவரின் சீடர்கள்தான். இயேசுவின் உண்மைச் சீடராய் கிறிஸ்தவர்கள் வாழும் போது, கடவுள் மகிமைப்படுகிறார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/christian/p15.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License