இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவது, பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் நம்பிக்கையுடன் பேசுவது போல் கடவுளுடன் நாம் பேசுவது இறைவேண்டல் ஆகும்.
இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் கீழே:
“விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்”
“திருமுறைச் சுவடி" எனும் நூலிலிருந்து தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.