இயேசுவின் வாழ்வில் நாம் நான்கு வகையான ஆன்மிகத்தைப் பார்க்கலாம்.
1. மரபு ஆன்மிகம்
மறு உலக வாழ்வு மற்றும் தனிமனித வாழ்வை மையமாகக் கொண்டு வாழ்வது மரபு ஆன்மிகம். மறு உலக வாழ்வின் சொந்தக்காரரான இயேசு, இவ்வுலகத் தனிமனித வாழ்வில் எல்லோரும் வியக்கதக்க வகையில் பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்.
2. போராட்ட ஆன்மிகம்
மனித நேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் தன்னையே அர்ப்பணிக்கும் செயல்தான் போராட்ட ஆன்மிகம். இதை இயேசுவின் பணி வாழ்வு மிகவும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
3. இறைவாக்கினன் ஆன்மிகம்
நீயும் வாழ்ந்திடு, பிறரையும் வாழ விடு. இந்த இரண்டு நிலையிலும் தடையாக உள்ளவர்களைச் சின்னாபின்னமாக்கும் செயல் இறைவாக்கினன் ஆன்மிகம். இவ்வாறாக எல்லோரும் நலம் வாழ வழி வகுத்தவர்தான் இயேசு.
4. வாழ்வியல் ஆன்மிகம்
சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அறநெறி வேண்டியும், உண்மைக்காக தன் வாழ்வைப் பணயம் செய்து, தன்னுயிரையேத் தியாகம் செய்வதுதான் வாழ்வியல் ஆன்மிகம். இதை நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே.
இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒருவகையைத் தேர்ந்து தெளிந்து, சமுத்துவ சகோதரத்துவ சமுதாயம் உருவாக்க, இறையாட்சியைக் கொணர தன்னையே, தன்னுயிரையேக் கையளிக்க முயற்சி செய்யும் போது கிறிஸ்துவின் ஆன்மிகத்தில் நாம் பங்கு பெறலாம்.