பதினேழாம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவாலயத்தில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.
அந்தக் காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டைக் கடந்து கொண்டிருந்தார்.
காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார்.
இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்துச் சென்ற நட்சத்திரம் போலத்தான் இவையும் என உணர்ந்தார்.
பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.
பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார்.
தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னைக் கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாகத் தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.
அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மைக் காப்பாற்றக் காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.