வைஷ்ணவத்தைப் பத்து வகையாக வகைப்படுத்தியிருக்கின்றனர். அவை:
1. அத்வேஷி
பெருமாளின் மீதும் அடியார் மீதும் வெறுப்பற்றவர்
2. அனுகூலர்
அத்வேஷியாகவும் நட்போடும் இருப்பவர்.
3. திருநாமதாரி
மேற்கண்டவற்றோடு இறைவன் திருப்பெயரைத் தம் பெயராகக் கொண்டவர்.
4. சக்ராங்கி
இறைவன் திருச்சின்னங்களைத் தன் உடலில் தாங்கியவர்.
5. மந்திரபாடி
திருவெட்டெழுத்தை முறையாக ஓதுபவர்.
6. வைஷ்ணவன்
மேற்கண்டவற்றோடு புலன் இன்பங்களை விட்டு, பரமபதம் அடைய வேண்டி ஞான, பக்தி கர்மங்களைக் கடைப்பிடிப்பவன்.
7. ஸ்ரீவைஷ்ணவன்
மேற்கண்டவற்றோடு பற்றற்று இறைவனிடத்தில் சிந்தையை நிலைநிறுத்தியவன்.
8. பிரபன்னன்
மேற்கூறிய தகுதிகளோடு இறைவனை அடைய சரணாகதியே சிறந்தது என்பதைத் தெளிந்து அதன் மூலம் இறைவனை அடையப் பாடுபடுபவன்.
9. ஏகாங்கி
மேற்கண்டவற்றோடு சரணாகதியும் கூட ஏற்றதல்ல என்று இறைவன் ஒருவனை மாத்திரமே உபாயமாகக் கொள்பவன்.
10. பரமஏகாந்தி
சரணாகதியும், இறைவனைப் பற்றும் உபாயமும்கூட ஏற்றதல்ல என்று நாராயணனுக்கு நெருக்கமாக உள்ள ஆச்சார்யனையே பற்றிப் பிடித்துக்கொள்பவன்.