இந்திய மண்ணில் ஓடும் நதிகளில் முதன்மையான 12 புனித நதிகளில் குரு பிரவேசிக்கும் ராசிக்கேற்ப புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அவை;
1. மேஷம் – கங்கை
2. ரிஷபம் – நர்மதை
3. மிதுனம் – சரஸ்வதி
4. கடகம் – யமுனை
5. சிம்மம் – கோதாவரி
6. கன்னி – கிருஷ்ணா
7. துலாம் – காவிரி
8. விருச்சிகம் – தாமிரபரணி
9. தனுசு – பிரம்மபுத்ரா
10. மகரம் – துங்கபத்ரா
11. கும்பம் – சிந்து
12. மீனம் – ப்ரணிஹித
(இங்கு கோதாவரி துணைநதி)
புஷ்கரம் நதிகளை வழிபடும் விழா மட்டுமன்றி, முன்னோர்களையும் வழிபடும் விழாவாகவும் அமைந்துள்ளது. சாதாரண புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மகா புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும். ஒவ்வொரு ராசியிலும் குரு பகவான் பிரவேசிக்கும் முதல் 12 நாட்கள், ‘ஆதிபுஷ்கரம்’ என்றும் கடைசி 12 நாட்கள், ‘அந்த்ய புஷ்கரம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.