இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம், நாசிக் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் எட்டு விநாயர் கோயில்களில் இருக்கும் விநாயகர்களை அஷ்ட விநாயகர் (எட்டு விநாயகர்) என்கின்றனர். அஷ்டவிநாயக மூர்த்திகளும் தானாக தோன்றிய சுயம்பு மூர்த்திகளாகும். மராத்தியர்கள் இந்த எட்டு விநாயகர் கோயில்களுக்கும் நடந்தேச் சென்று வழிபடுகின்றனர். இப்படி வழிபடுபவர்களுக்கு அனைத்துத் தடைகளும் விலகி, ஒற்றுமை, செல்வம், கல்வி, அறிவு போன்றவை பெருகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
1. மோரேஷ்வர் - மோர்கோன், புனே மாவட்டம்
2. சித்தி விநாயகர் கோயில் - சித்தேடெக், அகமது நகர் மாவட்டம்
3. பல்லாலேஷ்வர் - பாலி, ராய்கட் மாவட்டம்
4. வரதவிநாயகர் - மகாத், ராய்கட் மாவட்டம்
5. சிந்தாமணி விநாயகர் - தேயுர், புனே மாவட்டம்
6. லெண்யாத்திரி கணபதி குடைவரைக் கோயில் - லெண்யாத்திரி, புனே மாவட்டம்
7. விக்னேஸ்வரர் கோயில் - ஒதர், நாசிக் மாவட்டம்
8. ரஞ்சன்கோண் கணபதி - ரஞ்சன்கோண், புனே மாவட்டம்
இக்கோயில்களில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோர்கவோன் கணேசர் ஆலயத்திலிருந்து பாத யாத்திரையைத் தொடங்கி, மேற்காணும் வரிசையில் எட்டாவதாக இருக்கும் ரஞ்சன்கோன் கணபதியை வழிபட்டு, மீண்டும் மோர்கவோன் கணேசரை வழிபட்டுப் பாதயாத்திரையை முடிப்பது பக்தர்களின் மரபாக இருக்கிறது.