பண்டைய இந்தியத் தத்துவ இலக்கியங்களை உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் என்கின்றனர்.
உபநிஷத் என்பதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3' சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது.
* 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.
* 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.
* 'ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதைக் குறிக்கிறது.
உபநிஷத் அல்லது உபநிடதம் என்பது இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும். எனவே, இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாகவே இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.
உபநிடதங்களில் மதிப்பு மிக்கதாக, 108 உபநிடதங்கள் இருக்கின்றன. அவை;
1. ஈசா வாஸ்ய உபநிடதம்
2. கேன உபநிடதம்
3. கடோபநிடதம்
4. பிரசின உபநிடதம்
5. முண்டக உபநிடதம்
6. மாண்டூக்கிய உபநிடதம்
7. தைத்திரீய உபநிடதம்
8. ஐதரேய உபநிடதம்
9. சாந்தோக்கிய உபநிடதம்
10. பிரகதாரண்யக உபநிடதம்
11. பிரம்ம உபநிடதம்
12. கைவல்ய உபநிடதம்
13. ஜபால உபநிடதம்
14. சுவேதாசுவதர உபநிடதம்
15. அம்ச உபநிடதம்
16. ஆருணேய உபநிடதம்
17. கர்ப்ப உபநிடதம்
18. நாராயண உபநிடதம்
19. பரமகம்ச உபநிடதம்
20. அமிர்தபிந்து உபநிடதம்
21. அமிர்தபிந்து உபநிடதம்
22. அதர்வசிரசு உபநிடதம்
23. அதர்வசிகா உபநிடதம்
24. மைத்ராயனிய உபநிடதம்
25. கௌசிதகி உபநிடதம்
26. பிருகஜபால உபநிடதம்
27. நரிசிம்ம தபனிய உபநிடதம்
28. காலாக்னி ருத்ர உபநிடதம்
29. மைத்ரேய உபநிடதம்
30. சுபால உபநிடதம்
31. சூரிக உபநிடதம்
32. மாந்திரீக உபநிடதம்
33. சர்வசர உபநிடதம்
34. நிரலம்ப உபநிடதம்
35. சுகரகசிய உபநிடதம்
36. வச்ரசூசி உபநிடதம்
37. தேஜோபிந்து உபநிடதம்
38. நாதபிந்து உபநிடதம்
39. தியானபிந்து உபநிடதம்
40. பிரம்மவித்யா உபநிடதம்
41. யோகதத்துவ உபநிடதம்
42. ஆத்மபோத உபநிடதம்
43. நாரதபரிவராஜக உபநிடதம்
44. திரிசிகபிராமண உபநிடதம்
45. சிதா உபநிதடம்
46. யோகசூடாமணி உபநிடதம்
47. நிர்வாண உபநிடதம்
48. மண்டல-பிராமண உபநிடதம்
49. தட்சிணாமூர்த்தி உபநிடதம்
50. சாரப உபநிடதம்
51. கந்த உபநிடதம்
52. மகாநாராயண உபநிடதம்
53. அத்வயாத்ரக உபநிடதம்
54. இராம ரகசிய உபநிடதம்
|
55. இராம தபனீய உபநிடதம்
56. வாசுதேவ உபநிடதம்
57. முத்கல உபநிடதம்
58. சாண்டில்ய உபநிடதம்
59. பைங்கல உபநிடதம்
60. பைசுக உபநிடதம்
61. மகா உபநிடதம்
62. சரீரக உபநிடதம்
63. யோகசிக உபநிடதம்
64. திரியத்தத்துவ உபநிடதம்
65. பிருகத்-சந்நியாச உபநிடதம்
66. பிரம்மரகசிய பரிவராஜக உபநிடதம்
67. அக்சமாலிகா உபநிடதம்
68. அவ்யக்த உபநிடதம்
69. ஏகாக்சர உபநிடதம்
70. அன்னபூர்ணா உபநிடதம்
71. சூர்ய உபநிதம்
72. அக்சி உபநிதம்
73. அத்யாதம உபநிதம்
74. குந்திகா உபநிதம்
75. சாவித்திரி உபநிடதம்
76. ஆத்ம உபநிடதம்
77. பாசுபதபிரம்ம உபநிடதம்
78. பரப்பிரம்ம உபநிடதம்
79. அவதூத உபநிதம்
80. திரிபுரதபிணி உபநிடதம்
81. தேவி உபநிடதம்
82. திரிபுர உபநிதம்
83. கதாசுருதி உபநிடதம்
84. பாவனா உபநிதம்
85. உருத்திரத்திய உபநிடதம்
86. யோக-குண்டலினி உபநிதம்
87. பஸ்ம உபநிடதம்
88. உருத்திராகச உபநிடதம்
89. கணபதி உபநிதம்
90. தர்சண உபநிதம்
91. தாராசர உபநிடதம்
92. மாகாவாக்கிய உபநிடதம்
93. பஞ்சபிரம்ம உபநிடதம்
94. பிராணக்னிகோத்ர உபநிடதம்
95. கோபால தபனீ உபநிடதம்
96. கிருஷ்ண உபநிடதம்
97. யக்ஞவாக்கிய உபநிடதம்
98. வராக உபநிடதம்
99. சத்யாயனிய உபநிடதம்
100. ஹயக்ரீவ உபநிடதம்
101. தத்தாத்திரேய உபநிடதம்
102. கருட உபநிடதம்
103. காளி-சந்திரண உபநிடதம்
104. ஜபாலி உபநிடதம்
105. சௌபாக்யலட்சுமி உபநிடதம்
106. சரசுவதி உபநிடதம்
107. பௌரிச உபநிடதம்
108. முக்திகா உபநிடதம்
|
108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
10 முக்கிய உபநிடதங்கள். அவை;
1. ஈசா வாஸ்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)
2. கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)
3. கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
4. பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
5. முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
6. மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
7. ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
8. தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
9. பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
10. சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)
இந்த 10 உபநிடதங்கள் தவிர,
24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
20 யோக உபநிடதங்கள்
17 சன்னியாச உபநிடதங்கள்
14 வைணவ உபநிடதங்கள்
14 சைவ உபநிடதங்கள்
9 சாக்த உபநிடதங்கள்
என்று மொத்தம் 108 உபநிடதங்கள்.
இவைகளில்,
10 இருக்கு வேதத்தைச் சார்ந்தவை
32 கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்தவை
19 சுக்ல யசுர்வேதத்தைச் சார்ந்தவை
16 சாம வேதத்தைச் சார்ந்தவை
31 அதர்வண வேதத்தைச்சார்ந்தவை.
முக்கிய பத்து உபநிடதங்களைத் தவிர, இதர 98 உபநிடதங்களில்,
1. சுவேதாசுவதர உபநிடதம்
2. கௌசீதகீயம்
3. நரசிம்மபூர்வதாபனீயம்
4. மகோபநிடதம்
5. கலிசந்தரணம்
6. கைவல்ய உபநிடதம்
7. மைத்ராயணீயம்
ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.