இந்து சமயத்தின் சைவத் திருமணத்தின் போது, மணப்பெண்ணின் வலது காலை மணமகன் கைகளாற் பிடித்து ஏழடி எடுத்து வைக்கும்படி செய்ய வேண்டும் எனும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நடைமுறையில், ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்லப்படும். அந்த மந்திரத்தின் உண்மைப் பொருள் இதுதான்;
1. உனக்கும் வாழ்க்கையில் உணவு குறைவில் அளிப்பதற்கு இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
2. உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும்.
3. விரத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும்.
4. சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னைப் பின் தொடரட்டும்.
5. பசுக்கள் உள்ளிட்ட தூய விலங்குகள் பின் தொடர்ந்து வரட்டும்.
6. அனைத்து வளங்களும் கிடைக்கப் பின் தொடர்ந்து வரட்டும்.
7. உடன் வாழ்வில் இடம் பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் குறைவின்றி நிறைவேற்ற இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வரட்டும்.
ஏழடிகள் நடந்த நாமிருவர்கள் நண்பர்களானோம். இருவரும் சேர்ந்து மகிழ்வோடு இருப்போம். என்னுடன் இணைந்து வா என்னும் பொருளில் இந்நிகழ்ச்சி அமையும்.
இதற்கு “ஸ்பத பதி” என்று பெயர்.