இந்து சமயத்தில் கட்டிடங்களுக்குக் கண்ணூறு ஏற்படுவதைத் தடுக்கச் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவைகளில் சில;
* கட்டிடங்களில் நீர் பூசணிக்காய் கட்டுவது
* நீர்ப் பூசணியில் கண்திருஷ்டி பூத பொம்மையை வரைந்துத் தொங்கவிடுதல்
* திருஷ்டி பொம்மை எனப்படும் பழைய சட்டை மற்றும் முழுக்கால் சட்டையில் வைக்கோல் திணித்துக் கட்டிடத்தின் முன்பு கட்டுதல்
* கண்திருஷ்டி பூதம் பொம்மை வரைதல்
* கண்திருஷ்டி பூதம் பொம்மையை கட்டுதல்
* கண்திருஷ்டி விநாயகர் ஓடு ஒட்டுதல்
* கண்திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டுதல்
* கண்திருஷ்டி விநாயகர் பொம்மையை மாட்டுதல்
* எலுமிச்சைப் பழத்தைச் சரி பாதியாக அறுத்து ஒரு பாதியில் மஞ்சள் தடவியும் மறுபாதியில் குங்குமம் தடவியும் வைத்தல்
* பச்சை மிளகாய் எலுமிச்சை கோர்த்துக் கட்டுதல்
* துணி பொம்மையை தூக்கில் தொங்க விடுதல்
* கோழிக்குஞ்சைத் தூக்கில் தொங்கவிடுதல்
* கற்றாழைச் செடியை பிடுங்கி, தலைகீழாகத் தொங்கவிடுதல்
* ஆகாசக் கருடன் கிழங்கினை மஞ்சள் குங்குமம் தடவித் தொங்கவிடுதல்
* படிகாரத்தை கருப்பு நிறக் கயிற்றில் கட்டித் தொங்கவிடுதல்
* முழுத்தேங்காயைக் கட்டித் தொங்கவிடுதல்
* வீட்டு வாசலில் கழுதையின் படத்தை மாட்டுதல்