திரிபுராவில் ஜூலை மாதத்தில் ஒரு வார காலமாக நடைபெறும் திருவிழாவான கர்ச்சி பூசையின் போது, சதுர்தச தேவதை அல்லது பதினான்கு கடவுள்கள் வழிபாடு நடைபெறுகிறது.
இவ்வழிபாட்டில் இடம் பெறும் 14 கடவுள்கள் இவர்கள்தான்.
1. ஹர - சிவன் - அழிப்பவர்
2. உமா - துர்க்கை - சிவனின் துணைவி
3. ஹரி - விஷ்ணு - பாதுகாப்பவர்
4. மா - லட்சுமி - விஷ்ணுவின் துணைவி மற்றும் செழுமையின் தெய்வம்
5. பானி - சரசுவதி - அறிவின் தெய்வம்
6. குமாரா - முருகன் - போர்க் கடவுள்
7. கணபா - பிள்ளையார் - ஞானத்தின் கடவுள்
8. பித்து - சந்திர தேவன் - நிலவு
9. கா - பிரம்மா - உருவாக்கியவர்
10. அப்தி - சமுத்திரம் - கடலின் கடவுள்
11. கங்கை - கங்கை - ஆறு
12. சேகி - அக்னி தேவன் - நெருப்புக் கடவுள்
13. காமா - காமதேவன் - அன்பின் கடவுள்
14. ஹிமாத்ரி - ஹிமாவத் - இமயமலை
திரிபுரா மாநிலத்தில் இவ்விழாக் கொண்டாட்டத்தின் முதல் நாள் அரசு விடுமுறை வழங்கப்படுகிறது.