நாபி என்பவர் பிள்ளை வரம் வேண்டி வேள்வி ஒன்றினை நடத்தினார். இந்த வேள்வியில் தோன்றிய நாராயணன், அங்கிருந்த ரிஷிகளிடம் என்ன வேண்டுமென்று கேட்டார்.
ரிஷிகள், “நாபி மன்னனுக்குத் தங்களைப் போன்ற பிள்ளை பிறக்க வேண்டும்” என்ற்கு கேட்டனர்.
நாராயணன், “தானே அவருக்குக் குழந்தையாகப் பிறக்கிறேன்” என்று வரமளித்தார்.
அதன்படி நாபிக்கு மகனாகப் பிறந்த நாராயணன் ரிஷபதேவராகத் தோன்றுகிறார்.
ரிஷபதேவர் பாகவதத்தில் சம்சார சாகரத்தைக் கடக்க இருபத்தைந்து வழிகளைக் கூறுகிறார். இவற்றில் ஒன்றைப் பின்பற்றினாலும், மற்ற வழிகள் தாமாகவே வந்தடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த வழிகள்;
1. பகவானிடம் பக்தி கொள்தல்.
2. பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தல்.
3. பேராசையை விட்டொழித்தல்.
4. இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகப் பாவித்தல்.
5. கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுதல்.
6. தத்துவ விசாரணை செய்தல்.
7. தவம் செய்தல்.
8. பலன் கருதாமல் பணிகளைச் செய்தல்.
9. கோயில் பணிகளைச் செய்தல்.
10. பகவானின் கதைகளைக் கேட்டல்.
11. உத்தமர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்தல்.
12. பகவான் குணங்களைப் பாடல்.
13. யாருடனும் விரோதமில்லாமல் இருத்தல்.
14. அனைவருடனும் சமமாகப் பழகுதல்.
15. எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருத்தல்.
16. என் வீடு, என் மனைவி, என் குழந்தைகள் எனும் எண்ணத்தை விடுத்தல்.
17. ஆத்மா குறித்த சாத்திரங்களை ஆராய்தல்.
18. தனிமையில் இருத்தல்.
19. இந்தீரியங்கள் மற்றும் மனதைக் கட்டுப்படுத்தல்.
20. சாத்திரங்கள், பெரியோர் உபதேசங்களில் நம்பிக்கை கொள்தல்.
21. பிரம்மச்சாரிய விரதத்துடன் இருத்தல்.
22. செய்கிற செயல்களைச் சிரத்தையாகச் செய்தல்.
23. பேச்சைக் கட்டுப்படுத்துதல்.
24. பிரபஞ்சம் அனைத்திலும் பகவான் இருப்பதாக நினைத்தல்.
25. யோக சாதனைகள் செய்தல்.