நடனக் கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்த சிவபெருமான், ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதை நூற்றெட்டு சிவதாண்டவங்கள் என்கின்றனர். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதேப் போன்று, நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அவை தமிழில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. (அடைப்புக்குறிக்குள் வடமொழிச் சொல்)
1. மலரிடுகை (தாலபுஷ்பபுடம்)
2. நுடங்குகை (வர்த்திதம்)
3. நொசிகுறங்கு (வலிதோருகம்)
4. கிளிகை நுடக்கம் (அபவித்தம்)
5. இணைப்பறடு (சமநகம்)
6. உரங்கையொடுக்கம் (லீனம்)
7. குறுக்கிடு கையோச்சு (சுவஸ்திக ரேசிதம்)
8. உட்கொடு குறுக்கிடுகை (மண்டல ஸ்வஸ்திகம்)
9. தட்டுத்தாள் (நிகுட்டம்)
10. சாய் தட்டுத்தாள் (அர்தத நிகுட்டம்)
11. சுழலரை (கடிச்சன்னம்)
12. கையோச்சு (அர்த்த ரேசிதம்)
13. மார்புக் குறுக்கீடு கை (வக்ஷஸ்வஸ்திகம்)
14. பித்தர் நடம் (உன்மத்தம்)
15. குறுக்கிடு கைகால் (ஸ்வஸ்திகம்)
16. புறக் குறுக்கீடு (பிருஷ்டஸ்வஸ்திகம்)
17. சுழற் குறுக்கீடு (திக்ஸ்வஸ்திகம்)
18. நொடிப்பெடுப்பு (அலாதகம்)
19. அரை நேர்பு (கடீஸமம்)
20. அதிர வீசும் கை (ஆஷிப்தரேசிதம்)
21. நிறைவீச்சு (விக்ஷிப்தாக்ஷிப்தம்)
22. குறுக்கிடு கால் (அர்த்தஸ்வஸ்திகம்)
23. மருட்கை (அஞ்சிதம்)
24. அரவச்சம் (புஜங்கத்ராசிதம்)
25. முன்னக முழங்கால் (ஊத்வஜானு)
26. வளைகால் (நிகுஞ்சிதம்)
27. மத்தளிகை (மத்தல்லி)
28. வீச்சு மத்தளிகை (அர்த்தமத்தல்லி)
29. விட்டுத் தட்டல் (ரேசித நிகுட்டம்)
30. பிறழ் குறங்கு (பாதாபவித்தகம்)
31. சுழலாக்கம் (வலிதம்)
32. சுழலகம் (கூர்நிடம்)
33. சுழலாக்கம் (லலிதம்)
34. கோல்நடம் (தண்டபக்ஷம்)
35. அரவச்ச வீச்சு (புஜங்கத்ராஸ்த ரேசிதம்)
36. தண்டையாட்டு (நூபுரம்)
37. பரிகாலசைவு (வைசாக ரேசிதம்)
38. வண்டாட்டு (ப்ரமரம்)
39. சதுரம் (சதுரம்)
40. அரவோச்சு (புஜங்காஞ்சிதம்)
41. கோலோச்சு (தண்டரேசிதம்)
42. கொட்டு தேன் (விருச்சிககுட்டிதம்)
43. இடை நோசிப்புச் சுழல் (கடிப்ராந்தம்)
44. தேள் இயக்கம் (லதா வ்ருச்சிகம்)
45. இயங்கிடை (சின்னம்)
46. தேள் எழுச்சு (விருச்சிக ரேசிதம்)
47. தேளீ (விருச்சிகம்)
48. அகல்நடம் (வியம்ஸிதம்)
49. சிறகுமெட்டு (பார்ஸ்வ நிகுட்டனம்)
50. பொட்டிடுகை (லலாட திலகம்)
51. ஒருக்களிப்பு (க்ராநதம்)
52. நோசிப்பு (குஞ்சிதம்)
53. வளைப்பு (சக்ரமண்டலம்)
54. உரம்பறுகை (உரோமண்டலம்)
55. வீசுகால்கை (ஆக்ஷிப்தம்)
56. அங்கால் விளக்கம் (தலவிலாசிதம்)
57. தாள்ப்பாள் (அர்கலம்)
58. ஒருமுக நடம் (விக்ஷிப்தம்)
59. சுழலும் நடம் (ஆவர்த்தம்)
60. அளவாடுகால் (டோலபாதம்)
61. திருப்பகம் (விவ்ருத்தம்)
62. இருப்புத் திருப்பு (விநிவ்ருத்தம்)
63. பக்க வீச்சு (பார்ஸ்வக்ராந்தம்)
64. நிலைப்பின்மை (நிசும்பிதம்)
65. மின்னோர்பு (வித்யுத் ப்ராந்தம்)
66. விரிவியக்கம் (அதிக்ராந்தம்)
67. திருப்பகம் (விவர்திதம்)
68. களிறாடல் (கஜக்ரீடிதம்)
69. கொட்டாடல் (தவஸம்ஸ்போடிதம்)
70. கலுழவியக்கம் (கருடப்லுதம்)
71. கன்னளி (கண்டஸூசி)
72. ரிப்பாடல் (பரிவ்ருத்தம்)
73. பக்க முழங்கால் (பார்ஸ்வ ஜானு)
74. கழுகியக்கம் (க்ருத்ராவலீனம்)
75. துள்ளல் கொட்டு (சன்னதம்)
76. நுனை (ஸூசி)
77. நுனைக் குறிப்பு (அர்த்தஸூசி)
78. துள்ளுமான் (ஸூசிவித்தம்)
79. திரிகுறங்கு (அபக்ராந்தம்)
80. மயில் நடம் (மயூரலலிதம்)
81. அரவியல் (சர்பிதம்)
82. ஓங்கு கால் (தண்டபாதம்)
83. துள்ளுமான் (ஹரிணப்லுதம்)
84. துள்ளலியக்கு (பிரேங்கோலிதம்)
85. நுசிப்பு (நிதம்பம்)
86. நழுவகற்சி (ஸ்கலிதம்)
87. துதிக்கை (கரிஹஸ்தம்)
88. ஊர்பு (பர ஸர்ப்பிதம்)
89. அரியாடல் (சிம்ஹ விக்ரீடிதம்)
90. கோளரி (சிம்ஹாகர்சிதம்)
91. திருகுநடம் (உத்விருத்தம்)
92. சார்பியல் (உபஸ்ருதம்)
93. தட்டோட்டு (தலஸங்கட்டிதம்)
94. தோற்றம் (ஜநிதம்)
95. நெகிழாக்கம் (அவாஹித்தம்)
96. உருக்காட்சி (நிவேசம்)
97. மறியாடல் (ஏலகாக்ரீடிதம்)
98. குறங்காட்சி (உருத்வ்ருத்தம்)
99. மயக்கு (மதக்ஷலிதம்)
100. மாலடி (விஷ்ணுக்ராந்தம்)
101. கலப்பகம் (ஸம்ப்ராந்தம்)
102. நிலைப்பு (விஷ்கம்பம்)
103. அடியொட்டாடல் (உத்கட்டிதம்)
104. காளையாட்டு (வ்ருஷ்பக்ரீடிதம்)
105. எழிற்சுழல் (லோலிதம்)
106. அரவெழுச்சி (நாகாபஸர்ப்பிதம்)
107. உருளி (ஸகடாஸ்யம்)
108. பூவரு கங்கை (கங்காவதரணம்)