சைவ சமயத்தினர் சிவபெருமானுக்காக எட்டு வகையான விரதங்களை மேற்கொண்டு வழிபாடு செய்கின்றனர். இவ்விரதங்கள் மூலம் சிவனின் முழுமையான அருளினைப் பெற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேசுவர விரதம் - கார்த்திகை மாதம், பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் இருப்பது.
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை நாளில் இருப்பது
5. கல்யாண விரதம் - பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளன்று கடைப்பிடிப்பது
6. பாசுபத விரதம் - தை மாதம் பூச நட்சத்திர நாளில் வருவது
7. அட்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி நாளில் கடைப்பிடிப்பது
8. கேதாரகௌரி விரதம் - ஐப்பசி மாதம் அமாவாசை நாளினையொட்டி வரும் நாளில் (தீபாவளி நாளில்) இருக்கும் விரதம்.