மகாமக யாத்திரை புரிவோர் குடந்தையில் நுழையும் முன் பஞ்ச குரோசத் தலங்கள் உள்ளிட்ட 18 கோயில்களை வணங்கி, இறுதியில் சாரங்கபாணியை வழிபட்டு ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஒரு நடைமுறை உண்டு.
பஞ்ச குரோசத் தலங்களை அடையும் பக்தர்களிடம் தங்கிய பாவங்கள், 'நான் உன்னை விட்டுப் போய்விடுகிறேன்' என்று அலறுமாம். (குரோசம் என்றால் அலறுதல்). அவை:
1. திருவிடைமருதூர் (மத்தியார்ஜுனம்), பஞ்ச குரோசத் தலங்களுள் முதலாவது.
2. திரிபுவனம்: கும்பகோணம் – திருவிடைமருதூர் செல்லும் சாலையில் உள்ளது.
3. அம்மாசத்திரம் (தர்ப்பாரண்யம்): குடந்தைக்கும் திரிபுவனத்திற்கும் இடையே உள்ள ஊர் இது.
4. திருநாகேஸ்வரம்: பஞ்ச குரோசத் தலங்களில் இரண்டாவது.
5. ஐயாவாடி (ரத்த கதலிவனம்): திருநாகேஸ்வரத்திற்கு அருகிலுள்ள கோயில் இது.
6. சிவபுரம் (கண்வபுரம்): குடந்தையை அடுத்த சாக்கோட்டைக்கு வடகிழக்கில் 2 கி.மீ. தொலைவு.
7. சாக்கோட்டை (லாங்கவாரண்யம்): குடந்தை– மன்னார்குடி சாலையிலிருந்து 5 கி.மீ. தொலைவு.
8. மருதாநல்லூர்: கருக்குடிநாதர் திருக்கோயில், கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 6 கி.மீ. தொலைவு.
9. பட்டீஸ்வரம் (பஞ்சாட்சரபுரம்): கும்பகோணத்திற்கு தென்மேற்கில் 6 கி.மீ. தொலைவு.
10. திருச்சத்திமுற்றம் (திரிசக்திபுரம்): பட்டீஸ்வரம் அருகில்.
11. தாராசுரம் (ருத்ராக்ஷாரண்யம்): பஞ்ச குரோசத் தலங்களில் மூன்றாவது.
12. திருவலஞ்சுழி (தட்சிணாவர்த்த சமஸ்தானம்).
13. சுவாமிமலை (குஹாசனம்): பஞ்ச குரோசத் தலங்களில் நான்காவது.
14. திரு இன்னம்பூர் (திருஇனபுரம்): கும்பகோணத்தில் வடக்கே 6 கி.மீ. தொலைவு.
15. திருப்புறம்பயம் (சாக்ஷிபுரம்): கும்பகோணத்திற்கு வடமேற்கே 8 கி.மீ. தொலைவில் கொள்ளிடக்கரையில் உள்ளது.
16. கொட்டையூர் (கோடிபுரம்): குடந்தைக்கு மேற்கில் திருவையாறுக்குச் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
17. கருப்பூர் (பாடலவனம்): பஞ்ச குரோசத் தலங்களில் ஐந்தாவது.
18. பாணாதுறை (பாதராயணபுரி): பாணபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்தில் ஒரு பகுதி.