காமம்
தனம், தான்யம், தாரம், பிள்ளை, பேரன்கள் மீது அளவிலா ஆசை. குரோதம்: பிறருக்கு தீமை செய்ய விழைவது.
லோபம்
பிறருக்கு ஈயாமல் சுயமாகவே வைத்துக்கொள்ளும் இயல்பு.
யோகம்
குடும்பம் மீது பாசம் கொண்டு செல்வ விருப்பத்தில் ஆழ்த்தல்.
மதம்
பிறரை இகழ்ந்து கர்வத்துடன் நடப்பது.
மாச்சர்யம்
பிறர் நலனில் பொறாமை கொள்ளுதல்.
டம்பம்
புகழுக்காக நல்ல செயலை மட்டும் செய்வது.
தர்ப்பம்
செல்வம், புகழில் பிறரைவிட உயர்ந்தவன் என கர்வம் கொள்ளல்.
ஈர்ஷை
தனக்கே நேர்ந்த துயரங்களை மற்றவரும் அனுபவிக்க வேண்டும் என எண்ணுதல்.
அசூயை
தீமை செய்தவருக்கு பதிலாக தீமை செய்யும் மனோபாவம்.