சைவ சமயத்தில் வழிபடுகின்ற ஒன்பது கன்னிகளை நவ கன்னியர் என்கிறார்கள். சர்வபூதமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகரமணி, காலவிகாரணி, காளி, ரவுத்திரி, ஜேஷ்டை, வாமை ஒன்பது கன்னியர்களை நவ சக்திகள் என்றும் அழைப்பர்.
இந்த நவ கன்னியரை வழிபடுகின்ற முறைக்கு நவ சக்தி வழிபாடு என்று பெயர். சைவ சமய ஆதினங்களில் இந்த நவ சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆதினங்களுக்கு உட்பட்ட கோயில்களில், ஒன்பது சிவாச்சாரியார்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் இறைவிகளின் பெயர்களை உச்சரித்து, மலர் தொடுத்து வழிபடுகின்றனர்.