சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பத் தேவையான பொருட்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு கால வழிபாட்டுக்கு உரிய பொருட்கள்;
முதல் காலம் - பஞ்சகவ்ய அபிஷேகம், பொங்கல் நிவேதனம், வில்வார்ச்சனை.
இரண்டாம் காலம் - பஞ்சாமிர்த அபிஷேகம், பாயச நிவேதனம், தாமரை மலர் அர்ச்சனை.
மூன்றாம் காலம் - தேன் அபிஷேகம், நெய்யும் மாவும் கலந்த நிவேதனம், முல்லை மலர் அர்ச்சனை.
நான்காம் காலம் - கரும்புச்சாறு அபிஷேகம், வெண்பொங்கல் நிவேதனம், நந்தியாவட்டை மலர் அர்ச்சனை.
விரிவான பூஜைகள் செய்ய இயலாதவர்கள் சிவாலய தரிசனம் செய்தும், சிவபுராணம் பாராயணம் செய்தும், சிவ புண்ணியக் கதைகளைக் கேட்டும் சிவனருள் பெறலாம்.