பழமையான பாகவதச் சம்பிரதாயத்தை ஒட்டி வந்த ராமானுஜரின் கடவுள் கருத்துப்படி, இறைவன் தனக்குள் ஐந்து வகையான வடிவங்களை ஏற்றுக் கொள்கிறான்.
1. பரரூபம் - இதுவே பரப்பிரம்மம் அல்லது நாராயணன். இவன் நித்திய விபூதியாகிய வைகுண்டத்தில் விளங்குகிறான்.
2. வியூகரூபம் - வாசுதேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் என்ற நான்கு வடிவங்களை, இறைவன் தன் பக்தர்கள் தன்னை வழிபடுவதற்காகவும், உபதேசிப்பதற்காகவும், சிருஷ்டி முதலியவற்றுக்காகவும் கொள்கிறான்.
3. விபவரூபம் - இறைவன் தானே அவதாரங்களெடுத்து விளங்குகிறான்.
4. அந்தர்யாமி ரூபம். -எல்லா உயிர்களின் இதயத்திலும் அவர்களுக்கு நண்பனாக உள்ளே இறைவன் உறைகிறான்.
5. அர்ச்சாவதார ரூபம் - இறைவன், அடியவர்கள் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களில் உறைகிறான். பிழைகள் நிறைந்த ஜீவர்களைத் தன் ஒப்பற்ற அன்பினாலும் கருணையினாலும் காத்து உதவுவதற்காகவே, இறைவன் இந்த ஐந்து வகையான வடிவங்களை ஏற்றுக் கொள்கிறான்.