இந்து சமயம் மனிதர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சொல்கிறது. அவை;
1. பசு வர்க்கம்
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் சிந்திக்க ஆற்றலின்றிப் பசுவைப் போன்று, (பசு - பாசத்தால் கட்டுண்டது) தூங்கி, விழித்து, புணர்ந்து, எந்த ஓர் உயர்ந்த லட்சியமும் இல்லாமல் பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து மறைந்து போகிறார்கள்.
2. வீர வர்க்கம்
இந்த வகையினர், படித்து அதனால் சற்றுப் பயன் பெற்றவர்கள். அவர்களிடையேச் சிந்தனை உண்டு. அந்தச் சிந்தனை முற்றும் பயன்படாமல் காமம், குரோதம், மதம்-மாச்சர்யங்களால் கட்டுண்டு காலத்தைக் கழித்து மறைகின்றனர்.
3. திவ்ய வர்க்கம்
இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்று அறிவு தெளிவுற்று ஞானம் பெறுகிறார்கள். சிந்தனைச் சிற்பிகளாகச் சிறந்தோங்கி, எது மறையும்? எது நிறையும்? எது பிறவிக் கடலிலிருந்து தம்மைக் கடைதேற்றும் என்ற வழியினைக் கண்டு அதனைப் பின்பற்றி பேரின்ப பெருவாழ்வைப் பெற்று உய்பவர்கள்,