கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும் போது ஒற்றைக் கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.
வலதுக் கையின் கீழே இடக் கையை சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.
விபூதியை இடக் கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து தரித்தல் கூடாது.
வலக் கையில் பெற்றுக் கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் தரிப்பது நலம். அவ்விதம் செய்ய இயலாவிட்டால், ஒரு சிறு தாளில் விபூதியை இட்டு அதிலிருந்து எடுத்துத் தரிக்கலாம்.
வயதில் நம்மை விட இளையவர் கைகளிலிருந்து விபூதி எடுத்துத் தரிக்கக் கூடாது. விபூதியை நம் கையில் இடச் செய்து அதிலிருந்து தான் எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.
குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்துத் தரிப்பதில் தவறில்லை .