கோயில்களில் நான்கு வேளைகளுக்குப் பூசை நடக்கிறது. இந்தப் பூசை முறையானது மனிதர்களின் உணவு வேளையைக் மையமாக கொண்டு அமைக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.
1. காலைச் சந்தி - காலை 6.00 மணிக்கு நடக்கும் பூசை.
2. உச்சிக்காலப் பூசை - நன்பகல் 11.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் நடக்கும் பூசை.
3. சாயரட்சைப் பூசை - மாலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் நடக்கும் பூசை.
4. அர்த்தசாமப் பூசை - இரவு 8.30 மணியிலிருந்து 10.00 மணிக்குள் நடக்கும் பூசை
மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரம் நடராசர் போன்ற சைவத் திருத்தலங்களில் ஆறு காலப் பூசை நடக்கின்றது.
1. உசத்கால பூசை - முதல் பூசையான இது, சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது.
2. காலசந்தி பூசை - ஆகமத்தின் படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெறுகிறது.
3. உச்சிக்கால பூசை - இப்பூசை நன்பகலில் நடத்தப்படுகிறது.
4. சாயரட்சை பூசை - இந்த பூசையானது சூரியனின் மறைவிற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பெறுகிறது.
5. சாயரட்சை இரண்டாம் கால பூசை - சூரியனின் மறைவிற்குப் பின்பு நடத்தப் பெறுகிறது.
6. அர்த்தசாம பூசை - அன்றைய பூசைகள் முடிந்த பின்பு, இரவு வேளையில் கடைசியாக நடைபெறுகிறது. இதனைப் பள்ளியறைப் பூசை என்றும் சொல்கின்றனர்.