சப்த மங்கைத் தலங்கள் திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகியனவாகும். இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ளன.
சப்த மங்கைத் தலங்களின் இறைவன், இறைவியின் பட்டியல் இது.
1. திருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி - பிரம்மனது சக்தி வடிவமான பிராமி, பிரம்மனது சாபம் நீங்க வழிபட்ட தலம்.
2. அரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை - மகேஸ்வரனுடைய (சிவன்) சக்தியான மகேஸ்வரி பூஜித்த தலம் ஹரிமங்கை எனப்படும் அரியமங்கை.
3. சூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி - முருகனுடைய சக்தியான கௌமாரி பூஜித்த தலம் சூலமங்கலம் எனப்படும் சூலமங்கை.
4. நந்திமங்கை - ஜம்புகேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி - மகாவிஷ்ணுவுடைய சக்தியான வைஷ்ணவி தலம் நல்லிச்சேரி எனப்படும் நந்திமங்கை.
5. பசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி - வராகி அம்மன் பூசித்த தலம் பசுபதிகோயில் எனப்படும் பசுமங்கை.
6. தாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி - இந்திரனின் சக்தியான இந்திராணி வழிபட்ட தலம் தாழமங்கலம் எனப்படும் தாழமங்கை.
7. புள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி - சாமுண்டி வழிபட்ட தலம் புள்ளமங்கலம் எனப்படும் எனப்படும் புள்ளமங்கை.