இந்துக் கோயில்களில் நிகழும் பூசைகளின் ஒரு பகுதியாக இடம் பெறும் ஒரு நிகழ்வு தீபாராதனை ஆகும். இது பூசையின் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகின்றது. கற்பூர ஒளியில் கிடைக்கும் தரிசனமே தீபாராதனை. தீபாரதனையின் போது பூசகர் பலவிதங்களில் தீப ஒளியை இறைவனின் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார். நித்தியம், நைமித்தியம், காமியம் என்று சொல்லப்படும் அன்றாடப் பூசை, காரணம் குறித்த பூசை, விளைவு கருதிய பூசை என்னும் மூவகைப் பூசைகளிலும் தீபாராதனை இடம்பெறுகின்றது. பூசை நிகழ்வுகளின் ஒழுங்கில் நைவேத்தியம் எனப்படும் உணவு படைத்தலுக்குப் பின்னர் தீபாராதனை தொடங்கும்.
தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன.
பூசையின் போது பெரிதும் பயன்படும் தீபங்களுள்;
1. ஒரு முக தீபம் அல்லது ஒற்றைத் தீபம்
2. அடுக்குத் தீபம்
3. பஞ்சமுக தீபம்
4. வில்வ தீபம்
5. இடப தீபம்
6. கும்ப தீபம்
7. ஈசனாதி தீபங்கள்
8. கற்பூர தீபம்
9. பஞ்சராத்திரிகைத் தீபம்
எனும் 9 வகை தீபங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவையன்றி பதினாறு வகைத் தீபங்களும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1. தூபம்
2. மஹாதீபம்
3. அலங்கார தீபம்
4. நாக தீபம்
5. விருட்சப தீபம்
6. புருஷா மிருக தீபம்
7. ஓல தீபம்
8. கமடதி தீபம்
9. கஜ தீபம்
10. வியாக்ர தீபம்
11. சிம்ஹ தீபம்
12. துவஜ தீபம்
13. மயூர தீபம்
14. பூரண தீபம்
15. நட்சத்திர தீபம்
16. மேரு தீபம்