இந்துக்களின் பண்பாட்டில் ஆறு வகையான பிரணாம் அல்லது வணக்கம் தெரிவிக்கும் முறைகள் உள்ளன. அவை;
1. அஷ்டாங்கம்
கால்கள், வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி மற்றும் தலை ஆகிய எட்டு உறுப்புகள் (அஷ்டாங்கம்) தரையில் படுமாறு கோயிலில் இறைவனை வணங்கும் முறையாகும்.
2. சாஷ்டாங்கம்
கால் விரல்கள், முழங்கால்கள், கைகள், மார்பு, முகவாய்க்கட்டை (தாடை) மற்றும் மூக்குப் பகுதிகள் தரையில் படுமாறு விழுந்து வணங்குதல்.
3. பஞ்சாங்கம்
முழங்கால்கள், மார்பு, தாடை மற்றும் நெற்றி ஆகிய உறுப்புகள் தரையில் படுமாறு விழுந்து வணங்குதல்.
4. தண்டவடாம்
குனிந்து முன்னந்தலை தரையில் படுமாறு வணங்குதல்
5. நமஸ்காரம்
நெற்றியில் இருகை கூப்பி வணங்குதல்
6. அபிநந்தம்
இரு கைகளை மார்பில் தொட்டு, குனிந்து வணங்குதல்