கூடாது...! கூடாது...!!
1. யார் மீதும் அவதூறுகள் சொல்லக் கூடாது.
2. பெற்ற தாயை ஒரு நாளும் மறக்கக் கூடாது.
3. போகத் தகாத இடங்களுக்குப் போகக் கூடாது.
4. சிந்தித்துப் பார்க்காமல் எதையும் செய்யக் கூடாது.
5. ஏழ்மையானவர்களிடம் பகைமை பாராட்டக் கூடாது.
6. சேரத் தகுதி இல்லாதவர்களோடு சேரக் கூடாது.
7. சாமர்த்தியமாகப் பேசிக் கலகம் செய்து அலையக் கூடாது.
8. தன்னை இகழ்ந்த உறவினரிடம் உதவி கேட்கக் கூடாது.
9. ஒருவர் நம் முன் இருக்கும் பொழுது புகழ்ந்து கூறிவிட்டு, அவர் சென்றதும் அவரைப் பற்றிக் குறை கூறக் கூடாது.
10. நற்பண்பு இல்லாதவரோடு சேரக் கூடாது.
11. அடுத்தவரை ஒரு போதும் கெடுக்கக் கூடாது.
12. பகைவனை உறவினன் என்று நம்பக் கூடாது.
13. மனைவி மீது குற்றம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
14. தன்னை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லக் கூடாது.
-வயல்பட்டி கண்ணன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.