தாசமார்க்கம் என்பது சைவ சமய முழுமுதற் கடவுளான சிவபெருமானை அடைவதற்கான சதுர்மார்க்கம் எனும் நான்கு வழிகளுள் ஒன்றாகும். இதனை ‘தொண்டு நெறி’ என்று தமிழில் சொல்கின்றனர்.
திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பல்வேறு தொண்டு நெறிகளை குறிப்பிட்டுள்ளார். அவைகளில் சில;
1. ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுதல்
2. மலர்களைக் கொய்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்
3. பசுஞ்சாணத்தால் திருக்கோயிலை மெழுகுதல்
4. ஆலயத்திலுள்ள குப்பைக் கூளங்களைக் கூட்டி சுத்தம் செய்தல்
5. இறைவனின் முன் நின்று அவனது நாமத்தைச் செப்புதல்
6. கோயில் மணிகளை அசைத்து ஓலி எழுப்புதல்
7. இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவருதல்