ஏதேனும் ஒரு பயனுக்காக, உருவத்துடன் கூடிய ஒரு குறிப்பிட்ட இறைவனை (இஷ்ட தேவதை) அல்லது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து பல காலம் மனதால் தொடர்ந்து நினைப்பதை உபாசனா அல்லது வித்யை அல்லது வேதகால தியானம் என்கின்றனர். தியானம் என்பது மனதை ஒரு முகப்படுத்தும் செயலாகும். உபநிடதங்களில் பல்வேறு பலன்களுக்கு பல்வேறு உபாசனைகள் கூறப்பட்டுள்ளது. வேத காலத்தில் இந்திரன், வாயு, வருணன், ருத்ரன், அக்கினி போன்ற தேவதைகளை திருப்தி செய்து நல்வாழ்வு பெற வேண்டி யாகங்கள் செய்யப்பட்டது. யாகங்கள் செய்வதால் கிடைக்கும் பலனைகளை விட, பலமடங்கு பயன்கள் தரத்தக்கதான ஈஸ்வர உபாசனைகள் அல்லது வித்யைகள். இவற்றை உபநிடத ரிஷிகள் அறிமுகப்படுத்தினர். இவ்வுபாசனைகளால் ஆன்மீக வளர்ச்சி உண்டாயிற்று.
உபநிடதங்களில் பல்வேறு நன்மைகளுக்காக 34 உபாசனைகள் கூறப்பட்டுள்ளது. ஒரே உபாசனை ஒன்றிக்கும் மேற்பட்ட உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது.
சாந்தோக்கிய உபநிடத உபாசனைகள் அல்லது வித்யைகள்
1. தஹரகாச உபாசனை
2. உத்கீத உபாசனை
3. பிராண-உத்கீத உபாசனை
4. ஓங்கார உபாசனை
5. இரண்யகர்ப உபாசனை
6. சூரிய உபாசனை
7. பரம்பொருள் உபாசனை
8. அக்கினி உபாசனை
9. வாமதேவ உபாசனை
10. பிரபஞ்ச உபாசனை
11. சர்வ உபாசனை
12. மது வித்யை
13. காயத்ரி உபாசனை
14. சாண்டில்ய வித்யை
15. சம்வர்க வித்யை
16. சோடசகலா வித்யை
17. உபகோசல வித்யை
18. பிராண வித்யை
19. பஞ்சாக்கினி வித்யை
20. வைஸ்வாநர வித்யை
21. பூமா வித்யை
22. பிரஜாபதி வித்யை
பிரகதாரண்யக உபநிடத வித்யைகள்
1. யாக அஸ்வ (குதிரை) வித்யை
2. யாக அக்கினி வித்யை
3. உத்கீத வித்யை
4. புருசோத்தம வித்யை
5. சப்த அன்ன வித்யை
6. உத்கீத வித்யை
7. மது வித்யை
8. சடாச்சரிய வித்யை
9. ஒளி வித்யை
10. சாரீரக வித்யை
11. ஓங்கார உபாசனை
12. பிரஜாபதி உபாசனை
13. இதய உபாசனை
14. சத்திய உபாசனை (பரம்பொருள் தியானம்)
15. வைஸ்வாநர அக்கினி வித்யை
16. காயத்திரி உபாசனை
17. சூரிய – அக்கினி உபாசனை
கடோபநிடத வித்யைகள்
1. நசிகேத வித்யை
2. அங்குஷ்டமாத்ர வித்யை
முண்டக உபநிடத வித்யைகள்
அட்சர பரா வித்யை