ஒரு வருடத்தில் ஆடல் வல்லோனாகிய நடேசப்பெருமானுக்கு 6 அபிசேகங்கள் சிறப்பாக இடம் பெறுகின்றன. அந்த அபிசேகக் காலங்களை அறிந்து கொள்வோம்.
1. சித்திரை மாதம் - திருவோண நட்சத்திர நாளன்று
2. ஆனிமாதம் - உத்தர நட்சத்திர நாளன்று
3. ஆவணி மாதம் - பூர்வபக்கச் சதுர்த்தசியன்று
4. புரட்டாதி மாதம் - பூர்வபக்கச் சதுர்த்தசியன்று
5. மார்கழி மாதம் - திருவாதிரை நட்சத்திர நாளன்று (ஆருத்ரா தரிசனம்)
6. மாசி மாதம் - பூர்வபக்கச் சதுர்த்தசித் திதியன்று
இங்கு பட்சம் என்பது,
பூர்வ பக்கம் - வளர்பிறைக் காலம் என்றும் சுக்கில பட்சம் எனவும் அழைக்கப்படும்.
அபர பக்கம் - தேய்பிறைக் காலம் என்றும் கிருஷ்ண பட்சம் என்றும் அழைக்கப்படும்.
உத்தராயணம் - ஒரு வருடத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேவர்கட்குப் பகற்காலமாகும். இதுவே உத்தராயணக் காலம் எனப்படும்.
தட்சணாயணம் - ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தேவர்கட்கு இராக்காலமாகும். இது தட்சணாயணக் காலம் எனப்படும்.