ஞானிகளிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்
சித்ரா பலவேசம்
ஞானிகளாக இருப்பவர்களுக்கு 26 நற்குணங்கள் இருக்க வேண்டும் என்று பகவத்கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். அவை;
1. அச்சமின்மை (அபயம்)
2. மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி)
3. ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)
4. தானம் (தேவையானோருக்கு பொருளுதவி)
5. ஐம்புலனடக்கம் (தம)
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ)
7. சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய)
8. தவம் (தப)
9. நேர்மை (ஆர்ஜவம்)
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)
11. உண்மை (சத்யம்)
12. சினமின்மை (அக்ரோத)
13. துறவு (த்யாகம்)
14. அமைதி (சாந்தி)
15. கோள் சொல்லாமை (அபைசுனம்)
16. உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
17. பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்)
18. மிருதுதன்மை (மார்தவம்)
19. நாணம் (ஹ்ரீ )
20. மன உறுதி (அசாபலம்)
21. தைரியம், துணிவு (தேஜ)
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
23. மனம் தளராமை (த்ருதி)
24. சுத்தம் (சௌசம்)
25. வஞ்சனை இன்மை (அத்ரோஹ)
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.